வெட்டுக்காயங்களை ஆற்றும் தன்மை கொண்டதும், மூட்டுவலியை போக்க கூடியதும், நரம்புகளை பலப்படுத்தும் தன்மை உடையதும், சிறுநீரக கற்களை கரைக்கவல்லதும், நெறிக்கட்டு, யானைக்கால் வீக்கத்தை போக்க கூடியதும், ஆண் மலட்டு தன்மையை சரிசெய்ய கூடியதுமான அரிவாள்மனை பூண்டுவின் நன்மைகள் குறித்து இன்று நாம் பார்ப்போம்.
சாலையோரங்களில் கிடைக்க கூடிய அரிவாள்மனை பூண்டுக்கு வட்ட திருப்பி, மலைதாங்கி என்ற பெயர்கள் உண்டு. மஞ்சள் நிற பூக்களை உடைய இதன் இலைகள் அரிவாளை போன்று இருக்கும். காயத்தை ஆற்றக் கூடிய தன்மை கொண்டது. குறிப்பாக, அரிவாளால் ஏற்படும் காயங்களை விரைவில் ஆற்றும். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட அரிவாள் மனை பூண்டு உள், வெளிப்பூச்சு மருந்தாக பயன்படுகிறது.
வெட்டுக்காயம் ஏற்பட்டால், அரிவாள்மனை இலையை பசையாக அரைத்து காயத்தில் தடவினால் ரத்தபோக்கு நிற்கும். வடு தெரியாத வகையில், காயம் சீக்கிரம் ஆறும். அரிவாள்மனை பூண்டு இலைகள் மற்றும் வேர்கள் மருத்துவ குணம்மிகுந்தது. பல்வேறு நோய்களுக்கு மருந்தாகிறது. அரிவாள்மனை பூண்டு காய்ச்சலை தணிக்க கூடிய தன்மை கொண்டது. மூட்டு வலி இல்லாமல் செய்யும். ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை உடையது.
இதன் வேரை பயன்படுத்தி நரம்புகளை பலப்படுத்தும் தேனீர் தயாரிக்கலாம். அரிவாள்மனை பூண்டு வேரை எடுத்துக்கொண்டு அதை தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்க வேண்டும். அதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். பின்னர் வடிக்கட்டி எடுத்து காய்ச்சிய பால் சேர்க்கவும். இந்த தேனீரை குடிப்பதன் மூலம் நரம்புகள் பலப்படும். அரிவாள்மனை பூண்டில் பல்வேறு நன்மைகள் உள்ளன. பித்தப்பை கற்கள், சிறுநீரக கற்களை கரைக்க கூடியது.
சிறுநீரை பெருக்கும் தன்மை கொண்டது. இதனால் தேவையற்ற நச்சுக்கள் வெளியாகிறது. சிறுநீரகத்துக்கு பலம் தரக்கூடியது. நரம்பு மண்டலங்களுக்கு பலத்தை கொடுக்கவல்லது. ஆண் மலட்டு தன்மையை போக்கும். அரிவாள்மனை பூண்டு இலையை பயன்படுத்தி சுரப்பிகளில் ஏற்படும் வீக்கம், நெறிக்கட்டு, யானைக்கால் வியாதிக்கு மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். இதற்கு அரிவாள் மனை பூண்டு இலை, விளக்கெண்ணெய் எடுத்துக்கொள்ளவும்.
இலையை பசையாக அரைத்து வைத்துக்கொள்ளவும். அதனுடன் விளக்கெண்ணெய் சேர்த்து தைல பதத்தில் காய்ச்ச வேண்டும். இதை பயன்படுத்துவதன் மூலம் விதை வீக்கம், யானைக்கால் வீக்கம், நெறிக்கட்டு சரியாகும். இதை உள்ளுக்குள் எடுத்துக் கொண்டால் வயிற்று பூச்சிகள் வெளியேறும். வயிறு சுத்தமாகும். அரிவாள் மூக்கு பச்சிலை, அரிவாள்மனை என்ற பெயர்களை கொண்ட இந்த அரிவாள்மனை பூண்டை சாப்பிட்டால் காய்ச்சல் சரியாகும். வயிற்று பூச்சிகளை வெளியேற்றும். வெளிப்பூச்சாக பயன்படுத்துவதன் மூலம் வெட்டுக்காயங்கள் குணமாகும். இதை தேனீராக்கி குடிப்பதன் மூலம் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆண் மலட்டுதன்மைக்கு அற்புத மருந்தாகும்
No comments:
Post a Comment