Monday, December 28, 2015

செப்பு பாத்திரம, குடிநீர்


செப்பு பாத்திரததில் தண்ணீர் நிரப்பி வைத்தால், அறையின் வெப்ப நிலையிலேயே, 4 மணி நேரத்தில் நீரில் உள்ள பாக்டீரியாக்கள் செத்து மடிகின்றன!!!
செப்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்தால், அறையின் வெப்ப நிலையிலேயே, 4 மணி நேரத்தில் நீரில் உள்ள பாக்டீரியாக்கள் செத்து மடிகின்றன. ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரில் பாக்டீரியாக்கள் 34 நாட்கள் உயிர் வாழ்கின்றன. பித்தளை பாத்திரத்தில் 4 நாட்கள் உயிர் வாழ்கின்றன. ரத்தத்தில் செப்புக் குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை குறைகிறது.
இ-கோலி பாக்டீரியாவைக் கொல்லும் திறன், செப்பு உலோகத்திற்கு உண்டு என, பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தங்கத்திற்குக் கூட, இது போன்ற திறன் கிடையாது.
இந்த நீர் மிகவும் தூய்மையாக இருப்பதால், நீரைப் பருகிய 45 நிமிடத்தில், செல்களால் உறிஞ்சப்படுகிறது.
உடலில், “மெலானின்’ என்ற நிறமியின் உற்பத்தி அதிகரிப்பதால், “விடிலிகோ’ என அழைக்கப்படும் வெண்படையும் குறைகிறது.
செப்பு பாத்திரங்கள் நூறு வருடங்களுக்கு முன்னர் வரை சமையல், தண்ணீர் சேகரிக்கும் பாத்திரமாக சாதாரணமாக எல்லார் வீடுகளிலும் பயன்படுத்த பட்டு வந்திருக்கிறது. அலுமினியம், எவர்சில்வர் போன்றவை செப்பின் பயன்பாட்டை குறைத்து விட்டது.
செப்பில் ஊற்றி வைக்கும் நீரில் ஓரிரண்டு துளசி இலைகளை போட்டு வைத்திருந்து குடித்தால் மிகவும் நல்லது.
உடம்பில் ஏதேனும் ஓரிடத்தில் செம்பு என்னும் உலோகமானது இருக்குமானால் அது ஆரோக்கியத்துக்கு ரொம்ப நல்லது.
பித்தளை மற்றும் செம்புப் பாத்திரத்தில் சமைக்கும் உணவு வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும். குன்மம் (அல்சர்) நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.
செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடித்தால் இருமல், இரைப்பு நோய் வராது.
மற்ற உலோகஙகளுக்கு இல்லாத சிறப்பு செப்பக்கு மட்டும் கொடுக்கபட்டிருப்பது ஏன் என்றால் செப்பு தன்னை சுற்றி இருக்கும் பரபஞ்ச ஆற்றல் அனைத்தையும் தனக்குள் ஈர்க்கவும் வல்லது வெளியிடவும் வல்லது. இதனால் தான் நமது முன்னோர்கள் சமைக்க, அருந்த, பூஜிக்க என்று அனைத்து தேவைகளுக்கும் செப்பு பாத்திரங்களை பயன்படுத்தினார்கள்.
செப்பு பாத்திரத்தை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அதில் பல மருத்தவ குணஙகள் அடங்கி இருக்கிறது. அதே பாத்திரத்தை பூஜைக்கும் பயன்படுத்தும் பொது கண்ணுக்கு தெரியாமல் மறைந்திருக்கும் இறை சக்தியை தன்பால் ஈர்த்து நமக்கு தரவல்லது. எனவே பூஜை என்று வரும் போது செப்பு பாத்திரங்களை பயன்படுத்துவது மட்டுமே சிறந்தது.
தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது. பல நேரங்களில், தாமிர குறைபாடு இருக்கையில், தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடிப்பதால் உடல்நல பிரச்சனைகளை சமநிலையில் வைத்திடும்.
தாமிரத்தில் அழற்சி நீக்கும் குணங்கள் அளவுக்கு அதிகமாக அடங்கியுள்ளது. கீல்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.
நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியின் அதிகரிக்க தாமிரம் உதவுகிறது. இரத்த சோகையை எதிர்க்க இரும்பு மிக முக்கியமான கனிமமாகும். இதற்கு தாமிரமும் சிறிய அளவில் தேவைப்படும்.
கர்ப்ப காலத்தில் உங்களையும், உங்கள் குழந்தையும் பாதுகாக்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி விசேஷ சவாலை சந்திக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடித்தால், தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் படாமல் பாதுகாப்போடு இருக்கலாம்.
தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது பாதுகாக்கிறது. மேலும் இயக்க உறுப்புகளால் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய இது உதவும்.
தாமிரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகளை சிறப்பாக கையாளும். கூடுதல் அளவிலான தாமிரத்தால், உங்கள் சருமம் மற்றும் முடிக்கு இயற்கையான இரத்த ஓட்டம் கிடைக்கும்.
++++++++++++++
ஆரோக்கியம் தரும் மூலிகை குடிநீர் !!!

        நோயில்லாத வாழ்வே சிறப்பான வாழ்க்கையாகும்.    இத்தகைய வாழ்வு வாழ நாம் கடைப்பிடிக்க வேண்டியது சுகாதாரமே..  சுகாதாரம் என்பது உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரை எல்லாமே அடங்கும்.  அதுபோல், உடலும், மனமும் நன்றாக இருந்தால் அதுவே ஆரோக்கியமாகும்.

இன்றைய சூழலில் குடிநீர், உணவு, இருப்பிடம், காற்று என அனைத்தும் மாசுபட்டுக் கிடக்கின்றன.  இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குடிநீரினால் உண்டாகும் நோய்களே மக்களை அதிகம் பாதிப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.  பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கும் நீர் கூட சுத்தமானது என்பதை உறுதி செய்ய முடியாது.  இவைகள் பெரும்பாலும் இரசாயன வேதிப் பொருட்கள் கலந்ததாக உள்ளன.  இவற்றை அருந்துவதால் பல நோய்களுக்கு இதுவே அஸ்திவாரமாக அமைந்து விடுகிறது. இதனால் நன்கு சுத்தமான நீரை அருந்த வேண்டும்.  உணவின் மூலமும், நீரின் மூலமும் நோய் தடுக்கும் மருந்துகளை உட்கொள்ள சித்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதில் வெறும் குடிநீரை அருந்துவதை விட சித்தர்கள்  கண்டறிந்து கூறியுள்ள மூலிகைக் குடிநீரை அருந்தினால் உடலுக்கு சக்தி கிடைப்பது மட்டுமின்றி நோயும்  தடுக்கப்படும்.

அந்த வகையில் ஆவாரம் பூ குடிநீர்,  கரிசாலை குடிநீர்,  நன்னாரி குடிநீர், துளசி குடிநீர், வல்லாரை குடிநீர்,  சீரகக் குடிநீர், நெல்லிப்பட்டைக் குடிநீர், மாம்பட்டைக் குடிநீர், ஆடாதோடைக் குடிநீர், போன்றவை அடங்கும்.

ஆவாரம்பூ குடிநீர்

“ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..”

என்ற மருத்துவப் பழமொழி உண்டு.  ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது.  இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு.  மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான்.

நீரில்  ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து  வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.

இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போõக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.

நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.

இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

துளசி குடிநீர்

துளசி நமக்கு அருமருந்தாகும். துளசி இலையுடன் சீரகம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு.

அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களுக்கும், வெயில் மற்றும், மழைக்காலங்களில் அலைந்து திரிபவர்களுக்கு துளசி குடிநீர் அருமருந்தாகும்.  இது உடற்சூடு, பித்தம் போன்றவற்றைத் தணிக்கக் கூடியது.

டைபாய்டு, மஞ்சள்காமாலை, மலேரியா, காலரா நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.  தொண்டைச்சளி, வறட்டு இருமல், புகைச்சல், தலையில் நீர் கோர்த்தல், அடிக்கடி தும்மல், போன்றவற்றைப் போக்கும்.  இரத்தத்தில் உள்ள சளியை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

வல்லாரை குடிநீர்

எல்லா நோய்களுக்கும் கொடுக்கப்படும் மருந்தில் முதல் மருந்தாகவும், துணை மருந்தாகவும் இருப்பது வல்லாரை.

இதனை சரஸ்வதி மூலிகை என்று அழைக்கின்றனர்.  இது மூளைக்கும், அதன் செயல்பாட்டிற்கும் அதாவது அறிவுத் திறனுக்கும், ஞாபக சக்திக்கும் ஏற்ற மூலிகையாகும்.

காயவைத்த வல்லாரை பொடியை நீரில் போட்டு கொதிக்க வைத்து  அனைவரும்  அருந்தலாம். 

இது ஞாபக சக்தியைத் தூண்டுவதுடன், பித்த அதிகரிப்பைக் குறைக்கும்.  இரத்தத்தில் ஏற்படும் இரும்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கி இரத்தச் சோகையை நீக்கும்.  நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கும்.  தொழுநோய், யானைக்கால் நோய், மூலம், மூட்டுவலி போன்ற வற்றிற்கு சிறந்த மருந்தாகும்.

கரிசாலை குடிநீர்

“ஏர்தரும் ஆன்ற கரிசாலையால் ஆன்மா சித்தி”

என்றார் வள்ளலார் இராமலிங்க அடிகள்.  அத்தகைய சிறப்பு வாய்ந்த கரிசாலை கண்களுக்கு ஒளியையும் உடலுக்குத் தேவையான  இரும்புச் சத்தையும் தரக்கூடியது.

வெள்ளை கரிசாலை இலைச் சூரணம் 200 கிராம் எடுத்து அதனுடன் முசுமுசுக்கை இலை 35 கிராம், நற்சீரகத்தூள் 35 கிராம் அளவு சேர்த்து கொதிக்க வைத்து தேவையான அளவு பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் கலந்து காலை, மாலை தேநீருக்குப் பதிலாக அருந்தலாம். அல்லது, கரிசாலையுடன் நற்சீரகம் சேர்த்துகொதிக்க வைத்து குடிநீராகவும் அருந்தலாம்.

கரிசாலை இரத்த சோகையைப் போக்கக் கூடியது.  இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.  இரத்தத்தில் உள்ள பித்தத்தைக் குறைக்கும்.

இரத்தக் கொதிப்பு, காசநோய், எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

சீரகக் குடிநீர்

சீர்+அகம் =சீரகம்.  அகம் என்னும் உடலை சீர்படுத்துவரே சீரகத்தின் சிறப்பான குணமாகும்.

சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி ஆறிய நீரை தினம் பருகி வருவது நல்லது.

இது உடற் சூட்டைத் தணிக்கும்.பித்தத்தைக் குறைக்கும்.

ரத்தத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்கி, ரத்தத்தைக் சுத்தப்படுத்தும். வியர்வை மற்றும் சிறுநீரைப் பெருக்கும்.

கண் சூடு குறைக்கும்.  வாய்ப்புண் வயிற்றுப்புண்ணைப் போக்கும்.

சரும நோய்கள் வராமல் தடுக்கும்.  இதயத்திற்கு இதமான குடிநீர்தான் சீரகக் குடிநீர்.

மாம்பட்டைக் குடிநீர்

மாம்பட்டையை இடித்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக்கி அருந்தினால், நரம்புகள் பலப்படும், உடல் சூடு தணியும், சரும நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். பித்தத்தைக் குறைக்கும்.  அஜீரணக் கோளாறை நீக்கும்.

நெல்லிப்பட்டைக் குடிநீர்

நெல்லி மரப் பட்டையை காயவைத்து இடித்து பொடியாக்கி குடிநீரில் இட்டு காய்ச்சி அருந்துவது நல்லது.

இது ஆஸ்துமா, சளி, இருமல், வறட்டு இருமல், தொண்டைக்கட்டு, நுரையீரல் சளி, இரத்தச் சளி போன்றவற்றைப் போக்கும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.  உடல் சூட்டைத் தணிக்கும்.  குடல்புண்களை ஆற்றும்.  மூலநோய்க் காரர்களுக்கு மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.

ஆடாதோடைக் குடிநீர்

ஆடாதோடை இலைகளை சிறிதாக நறுக்கி தேன் விட்டு வதக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து குடீநீராக அருந்தி வந்தால்,

சளி, இருமல், கோழைக்கட்டு, நாள்பட்ட நெஞ்சுச் சளி, மூக்கில் நீர் வடிதல், நுரையீரல் சளி போன்றவை நீங்கும்.

வாந்தி, விக்கல் போன்றவை குணமாகும்.

சைனஸ், ஆஸ்துமா நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இது சிறந்த மருந்து.

Tuesday, December 15, 2015

எலுமிச்சை Lemon

எலுமிச்சைக்கு முதலிடம் ஏன்?
எலுமிச்சை - இதை தேவக்கனி,
இராஜக்கனி என்றும் கூறுவார்கள்.
எல்லா பழங்களையும் எலி கடித்து
விடும் ஆனால் எலுமிச்சையை
மட்டும் எலி தொடவே தொடாது.
எலி
மிச்சம் வைத்ததாதல்தானோ என்னவோ
இந்தப் பழத்திற்கு எலிமிச்சை என்று
பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது.
எலுமிச்சை
புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப்
பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத்
தாவரம். இது சிட்ரஸ் லிமன்
(Citrus
limon) என்னும் அறிவியல் பெயர்
கொண்டது.
எலுமிச்சம் பழச் சாற்றில் 5% அளவுக்கு
சிட்ரிக் அமிலம் உண்டு. இதனால் இது
புளிப்புச் சுவை.
இதன் pH
அளவு 2 முதல் 3 வரை இருக்கும்.
இதனால் இதைப் பள்ளிகளில் கற்பித்தல்
சோதனைகளில் மலிவான அமிலமாகப்
பயன்படுத்துகிறார்கள்.
இதன்
தனித்துவமான சுவை காரணமாக
இதனை அடிப்படியாகக் கொண்டு பல
வகையான பானங்களும், இனிப்பு
வகைகளும் தயாரிக்கப் பட்டு ஆக்கப்பட்டு
வருகின்றன.
100 கிராம் எலுமிச்சை பழத்தில் உள்ள
சத்துக்கள்
நீர்ச்சத்து - 50 கிராம்
கொழுப்பு - 1.0 கிராம்
புரதம் - 1.4 கிராம்
மாவுப்பொருள் - 11.0 கிராம்
தாதுப்பொருள் - 0.8 கிராம்
நார்ச்சத்து - 1.2 கிராம்
சுண்ணாம்புச் சத்து - 0.80 மி.கி.
பாஸ்பரஸ் - 0.20 மி.கி.
இரும்புச் சத்து - 0.4 மி.கி.
கரோட்டின் - 12.மி.கி.
தையாமின் - 0.2 மி.கி.
நியாசின் - 0.1 மி.கி.
வைட்டமின் ஏ - 1.8 மி.கி.
வைட்டமின் பி - 1.5 மி.கி.
வைட்டமின் சி - 63.0 மி.கி
இதிலுள்ள அதிகமான வைட்டமின் 'சி' சத்தும்,
ரிபோஃப்ளோவினும்
புண்களை ஆற்ற வல்லது. எலுமிச்சை
சாறுடன் நீர் கலந்து சிட்டிகை உப்பு
போட்டு தொண்டையில் படுமாறு
பலமுறை கொப்பளிக்க தொண்டைப்
புண், வாய்ப்புண் ஆறும்.
எலுமிச்சைச் சாறுடன் நீர் கலந்து
அடிக்கடி வாய் கொப்பளித்தால் வாய்
துர் நாற்றம் மறையும்.
வாந்தியா?
எலுமிச்சைச் சாறுடன், இஞ்சிச் சாறு,
சிறிதளவு தேன் சேர்த்து,
வெதுவெதுப்பான நீரில் கலந்து
சாப்பிட விரைவில் குணம் தெரியும்.
எலுமிச்சைச் சாறுடன் வெந்நீர்
கலந்து குடிக்கும் போது
நெஞ்செரிச்சல், ஏப்பம், வயிறு உப்புசம்
குறையும். ஜீரணசக்கியும்
அதிகரிக்கும்.
கல்லீரலைப் பலப்படுத்த சிறந்த டானிக் எலுமிச்சை.
பித்தநீர் சரியான அனவில் சுரக்க
வழிசெய்கிறது. பித்தப்பையில்
ஏற்படும் கற்களைக் கரைக்க
உதவுகிறது.
சருமப் புண்களுககு
ஆன்டிசெப்டிக்காகப் பயன்படுகிறது.
எலுமிச்சைச் சாற்றை முகத்தில்
தடவிவர, முகத்திலுள்ள
கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள்
மறைகின்றன.
பாலேட்டுடன்
எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில்
தடவினால் சரும நிறம் பளிச்சிடும்.
தினமும் காலையில் வெறும்
வயிற்றில் இளஞ்சூடான நீரில்
எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன்
தேனூடன் பருகி வர உடல் எடை
குறையும்.
பொட்டாசியம் அதிகமான அளவில்
இருப்பதால் இதயக் குறைபாடுகளை
நீக்க உதவுகிறது.
உயர் இரத்த அழுத்தம்,
தலைச்சுற்றல், வயிற்றுப் பிரட்டல்
போன்ற உபாதைகள் நீங்கும்.
இரவு நேரத்தில் வெதுவெதுப்பான
நீரில், எலுமிச்சைச் சாறுடன் தேன்
கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும்.
உடல் மட்டுமின்றி, மனமும் அமைதி
அடையும்.
மனஅழுத்தம், ஸ்ட்ரெஸ்,
நீங்கும்.
உடலிலிருந்து நச்சுப்
பொருள்களையும்,
பாக்டிரியாக்களையும் வெளியேற்றி
மூட்டுவலிக்கு நிவாரணம்
அளிக்கிறது.
இரத்த சுத்தகரிப்பாக உதவுகிறது.
காலரா, மலேரியா போன்ற
காய்ச்சலின் போது
விஷக்கிருமிகளின் தாக்கத்தை நீக்கப்
பெரிதும் உதவுகிறது.
சில துளிகள் எலுமிச்சைச் சாறை
நீர் கலக்காமல் அப்படியே விட்டுக்
கொண்டால் நாக்கின் சுவை
அரும்புகள் தூண்டப்பட்டு, சுவை
தெரியும்.
தலையில் பொடுகுத் தொல்லை
நீங்க, எலுமிச்சைச் சாறினை தடவி
சிறிது நேரம் ஊறியபின் குளித்தால்,
பொடுகுத் தொல்லை நீங்கும்.
சிறிய
பழம் பயன்கள் அதிகம்
இதனைப்பயன்படுத்தி நோயற்ற
வாழ்க்கை வாழ்வோம்.
இயற்கை அழகு, புத்துணர்ச்சி,
உற்சாகம் இவையனைத்தையும் தரும்.
தேள்கொட்டினால்,
அந்த இடத்தில்
எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி
இரண்டு துண்டையும் தேய்க்க விஷம்
இறங்கும்.
தலைவலிக்கு
கடுங்காபியில் எலுமிச்சையின்
சாற்றை கலந்து கொடுத்தால் உடனே
குணமாகும்.
நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை
சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு
எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை
அல்லது உப்பு சேர்த்து கலந்து
குடித்து வந்தால், தகுந்த நிவாரணம்
பெறலாம்.
மயக்கம், வாந்தி, வாய் குமட்டல்,
நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது
வலி போன்றவற்றை குணப்படுத்தும்
தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.
கழிச்சலுக்காக மருந்துகள்
உட்கொண்டு, அதனால் அடங்காத
கழிச்சலும், வாந்தியும் ஏற்பட்டால்,
சீரகத்தை தேன் விட்டு பொன்னிறமாக
வறுத்து, அதனுடன் எலுமிச்சம்
பழச்சாற்றையும் சேர்த்து நீர் விட்டு
காய்ச்சி, உட்கொள்ள கொடுத்தால்
உடனே வாந்தியும், கழிச்சலும்.
எலுமிச்சை பழச்சாற்றை தலையில்
தேய்த்து தலை முழுகி வர பித்தம்,
வெறி, உடல் சூடு அடங்கும்.
அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால்
எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை
(கரிய போளம் என்பது கற்றாழையின்
உலர்ந்த பால். இது நாட்டு மருந்து
கடைகளில் கிடைக்கும்) சேர்த்து
காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர
ரத்தக்கட்டு கரையும்.
நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை
பழத்தில் துளையிட்டு விரலை
அதனுள் சொருகி வைக்க வலி
குறையும்.
எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து
குடிக்க வறட்டு இருமல் தீரும்.
இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த
அழுத்தம் குறையும்.
சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும்.
அப்படிப்பட்டவர்கள்,
மருதாணியை
அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில்
கலந்து பாதத்தில் தடவி வந்தால்
எரிச்சல் குணமாகும்.
சிறிதளவு எலுமிச்சை இலைகளை
அரைத்து சாறு பிழிந்து, அதனுடன்
சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து
குடித்தால் வாந்தி நிற்கும்.
எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில்
போட்டு காய்ச்சி,
அதில் இருந்து
எழும் ஆவியை முகத்தில் படும்படி
பிடிக்க நீர்பினிசம் தீரும்.
சீமையகத்தி எனப்படும் வண்டு கொல்லி
இலையை அரைத்து எலுமிச்சம்
பழச்சாற்றில் கலந்து மேலே பூசி வர
படர்தாமரை குணமாகும்.
சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து, பின் அந்த சாற்றுடன்
வெயிலில் காய வைக்கவும். நன்றாக
காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம்
பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து
மீண்டும் வெயிலில் காய வைக்கவும்.
நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து
பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு
தேன் அல்லது தண்ணீரில் கலந்து
மூன்று வேளை சாப்பிட்டுவர
அஜீரணம், பித்தம் தணியும். ரத்த அழுத்தம்
சீராகும்.
ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில்
எலுமிச்சம் பழம் மிக முக்கிய
பங்காற்றுகிறது. மேலும் கெட்ட
ரத்தத்தை தூய்மைப்படுத்து வதற்கு
எலுமிச்சம் பழத்தை விட மேலான
ஒன்று கிடையாது.
முக்கிய
வைட்டமின் சத்தான வைட்டமின் சி,
எலுமிச்சம் பழத்தில் நிறைய
இருக்கிறது.
எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக்
அமிலம் கிருமிகளை அழிக்கும்
தன்மை கொண்டது. அதனால் தொற்று
நோய் கிருமிகளின் தாக்குதலில்
இருந்து உடலை கண் போல
பாதுகாக்கிறது.
எலுமிச்சம் பழ ரசத்தை சாப்பிட்டால்
மண்ணீரல் வீக்கம் பிரச்சினையில்
இருந்து விடுபடலாம்.
எலுமிச்சம் பழத்தின் சாற்றை தேனில்
கலந்து சாப்பிடுவது ஒரு சத்து மிக்க
டானிக் ஆகும்.
உடலுக்கு வேண்டிய
உயிரூட்டத்தையும், ஒளியையும்
எலுமிச்சம் பழத்தின் மூலம் மனிதர்கள்
பெற இயலும்.
இத்தனை நன்மை செய்யக்கூடிய
எலுமிச்சம் பழத்துக்கு மலத்தை
கட்டக்கூடிய குணமும் உண்டு.
ஆனாலும் தேன் சேர்த்து உண்டு
வந்தால் மலக்கட்டு நீங்கி விடும்.
உடல்
பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை
அன்பர்கள், நீரிழிவு வியாதியால்
அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு
எலுமிச்சைச்சாறு அருந்தலாம்.
வயிற்றுவலி, வயிற்று உப்புசம்,
நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை
சரியாக்கும் ஒப்பற்ற சாறு. உயர்ந்த
கிருமி நாசினி. பொட்டாசியமும்
இதில் உள்ளது.
உயர் இரத்த அன்பர்கள் எலுமிச்சையால்
நலம் பெறலாம்.
சிறுநீர் அடைப்பு
விலகும். உடல் நச்சுக்களை
வெளியேற்றும். உடலின் தற்காப்பு
சக்தி எலுமிச்சையால் பெருகும்.
கடல் உப்பினால் உப்பிய உடம்பு
எலுமிச்சைச் சாறால் கட்டழகு மேனி
பெறும்.
கனிகளில் மதியூக மந்திரி
குணத்தை உடையது எலுமிச்சை.
எலுமிச்சைச் சாறை அப்படியே
பயன்படுத்தக் கூடாது. நீருடன் அல்லது
தேன் போன்றவற்றுடன் பயன் படுத்த வேண்டும்.
எலுமிச்சை, வெங்காயம்
போன்றவைகளை வெட்டியதும்
பயன்படுத்தி விட வேண்டும்.
இவ்வளவு பயன் தரும் தேவகனி (எலுமிச்சை) வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்றால் அது மிகையல்ல.

Wednesday, November 25, 2015

மூச்சுப்பயிற்சி

மூச்சி பயிற்சி

பஸ்திரீக்கா ;-

மூச்சி காற்றை இடது நாசியின் வழியாக மெதுவாக ஊள்ளே இழுத்து . இடது நாசியின் வழியாக மெதுவாக வெளியே விடவேண்டும் .
மூச்சி காற்றை வலது நாசியின் வழியாக மெதுவாக ஊள்ளே இழுத்து . வலது நாசியின் வழியாக மெதுவாக வெளியே விடவேண்டும் . ( ஐந்து முறை செய்ய வேண்டும் )

கபாலப்பதி ;-

மூச்சி காற்றை இடது நாசியின் வழியாக மெதுவாக ஊள்ளே இழுத்து . வலது நாசியின் வழியாக மெதுவாக வெளியே விடவேண்டும் .
மூச்சி காற்றை வலது நாசியின் வழியாக மெதுவாக ஊள்ளே இழுத்து . இடது நாசியின் வழியாக மெதுவாக வெளியே விடவேண்டும் . ( ஐந்து முறை செய்ய வேண்டும் )

குஜ்ஜைனி ;-

மூச்சி காற்றை இடது நாசியின் வழியாக மெதுவாக ஊள்ளே இழுத்து சிறிது நேரம் நிறுத்தி வலது நாசியின் வழியாக மெதுவாக வெளியே விடவேண்டும் . பின்னர்.
மூச்சி காற்றை வலது நாசியின் வழியாக மெதுவாக ஊள்ளே இழுத்து சிறிது நேரம் நிறுத்தி இடது நாசியின் வழியாக மெதுவாக வெளியே விடவேண்டும் . ( ஐந்து முறை செய்ய வேண்டும் )

சீத்தலாத்தீ ;-

நாக்கை குழல் போல மடித்து மூச்சு காற்றை மெதுவாக ஊள்ளே இழுத்து . நாசியின் வழியாக மெதுவாக வெளியே விடவேண்டும் .( ஐந்து முறை செய்ய வேண்டும் )

சீத்தாத்தீ ;-

நாக்கை மேல் நோக்கி மடித்து மூச்சு காற்றை மெதுவாக ஊள்ளே இழுத்து . நாசியின் வழியாக மெதுவாக வெளியே விடவேண்டும் .( ஐந்து முறை செய்ய வேண்டும் )

Tuesday, November 17, 2015

Cow Urine

Cow Urine Can Cure Many Diseases

Cow
The cow is a mobile medical dispensary. It is the treasure of medicines. Cow urine therapy is capable of curing many curable and incurable diseases. The holy texts, like Atharva Veda, Charaka Samhita, Rajni Ghuntu, Vridhabhagabhatt, Amritasagar, Bhavaprakash, Sushruta Samhita, etc., contain beautiful description about the medicinal benefits of cow urine.
Cow Urine Treatment and Research Center, Indore has conducted a lot of research over the past few years and reached the conclusion that it is capable of curing diabetes, blood pressure, asthma, psoriasis, eczema, heart attack, blockage in arteries, fits, cancer, AIDS, piles, prostrate, arthritis, migraine, thyroid, ulcer, acidity, constipation, gynecological problems, ear and nose problems and several other diseases.
[ Those who wish to purchase medicinal distilled cow urine can visit the following website. ]
http://www.matchless-gifts.com/store/products/Gomata-Ark-(Medicinal-Distilled-Cow-Urine).html
The analysis of cow urine has shown that it contains nitrogen, sulphur, phosphate, sodium, manganese, carbolic acid, iron, silicon, chlorine, magnesium, melci, citric, titric, succinic, calcium salts, Vitamin A, B, C, D, E, minerals, lactose, enzymes, creatinine, hormones and gold. A person falls ill when there is deficiency or excess of these substances inside the body. Cow urine contains all of these substances, which are naturally present in the human body. Therefore consumption of cow urine maintains the balance of these substances and this helps cure incurable diseases.
The Indian culture gives special place to the cow. All the 330 million gods have cow as their prime temple (all devas reside in the cow). Deva means to give, the strength to give, the ability to give more and take the minimum. This is known as Devata. The cow takes very less from us and gives us more. Therefore the Indian people have shown this with the help of strict devotion and dedication. Thus the cow has a prominent place in the Indian life and economy. Wealth, religion, enjoyment and salvation are accomplished with the service of the cow. The Indian farmer used to be known as king, or the giver of grains, due to the tradition developed in India thousands of years back. Our entire life is dependent on the cow.
The whole world takes the cow as their mother. The reason is that the birth-giving mother gives milk to its child only for one or two years, but the mother cow gives milk throughout its life, which is like nectar. A black cow is tied in the Shiva temple, and when we see the Shiva along with the black cow then we are able to overcome the malefic effects of planets in our natal horoscope. When we see the ankles of the cow we protect ourselves from sudden deaths. Circumambulating the cow is equivalent to visiting all of the holy places. As the peepal tree and tulasi plant give oxygen similarly cow is the only animal which purifies the air. If one spoon of pure ghee is poured on burning cow dung (in homa) then they can produce one-ton of pure air, therefore ghee made with cow milk is used in sacrificial fires and havens. There is no better method to remove pollution.
Cow milk, butter, ghee and buttermilk are like nectar. The cow dung is not faeces, but a purifier. It helps produce the best quality grains, fruits, and vegetables when used as manure. Cow urine is a divine medicine and is a natural pesticide for crops. Pure ghee made with cow milk poured on burning cow cakes dung, produces a smoke that subsides the effect of poisonous gas. Cow urine contains copper, which is converted into gold inside the human body. It removes all toxicity. Drinking cow milk gives strength and increases the pure qualities in the human mind.
The horns and back hump of the cow are like two powerful pyramids. We receive the strengths of the stars and sun through the medium of cow dung, milk, curd, ghee, etc. The place where the cow is tied does not produce any vastu related ill effects. If there is any malefic effect of any planet, serving the cow with chapatti and jaggery calms down the malefic effect.
The following are some of my personal experiences treating people with cow urine therapy. A person was suffering with cancer and had been told that they would not survive for long; cow therapy was done on many such cases. Out of the many patients, who were suffering with cancer for the last 4 years, many are now leading a healthy life. In the same way, a diabetes patient who was taking insulin and having a sugar level of 488 or 420 did not have the necessity to take insulin after the treatment of cow urine. In the same way AIDS, asthma, psoriasis, eczema, blood pressure, heart disease, prostrate, piles, etc., also have been cured with this treatment. Premchand Rathore was suffering from asthma and isnophilia. He had palpitations and cough along with phlegm. He is now enjoying a healthy life after taking cow urine therapy. The cough and phlegm reduced. Mrs. Sharda Jalani was having varicose veins and dysmenorrhea. She used to have swollen nerves, pain, and swelling as soon as she used to stand up and it was very painful at the time of menses. She was advised to undergo operation for both of these problems. But she went for cow urine therapy and is now healthy. Omprakash Paul suffered a heart attack. He had high levels of cholesterol and chest pain. After taking cow urine therapy he is able to walk up to four kilometers, he does not get chest pain and his cholesterol level is also normal. Chandmal Gurjar suffered with cancer of the food pipe four years back, he could not take liquids also. Now he is able to eat and drink properly, he is healthy and working in the rice fields. There are thousands of people who have recovered from serious diseases after taking this therapy.
Today many AIDS patients are taking cow urine therapy. People who were suffering with migraine and headache for the past 15 years have recovered within six months of taking this therapy. In the past few years the Cow Urine Treatment and Research Center, Indore has treated 150,000 people. Out of the total patients 85 to 90 percent were also suffering from constipation. There is an old saying that if the stomach is clean half of the diseases get cured automatically. The patients taking cow urine therapy are able to enjoying sound heath within one month of this therapy.
Sushma Khurana had a thyroid complaint. Before taking this therapy her T3 level was 4, T4 was 15, TSH was 0.2. After six months of this treatment T4 was 9.97, TSH was 1.35 and today she is free of this problem. This therapy is also beneficial in the case of eczema, ringworm, itching and other skin problems. Old eczema patients have gained a lot from this therapy. Also school and college aged children can be free from the menace of pimples and acne with this simple therapy.
[ Those who wish to purchase medicinal distilled cow urine can visit the following website. ]
http://www.matchless-gifts.com/store/products/Gomata-Ark-(Medicinal-Distilled-Cow-Urine).html 
Chemical composition of distilled cow urine:
Nitrogen (N2, NH2): Removes blood abnormalities and toxins, Natural stimulant of urinary track, activates kidneys and it is diuretic.
Sulphur (S): Supports motion in large intestines. Cleanses blood.
Ammonia (NH3): Stabilise bile, mucous and air of body. Stabilises blood formation.
Copper (Cu): Controls built up of unwanted fats.
Iron (Fe): Maintains balance and helps in production of red blood cells & haemoglobin. Stabilises working power.
Urea CO(NH2)2: Affects urine formation and removal. Germicidal.
Uric Acid (C5H4N4O3): Removes heart swelling or inflammation. It is diuretic therefore destroys toxins.
Phosphate (P): Helps in removing stones from urinary track.
Sodium (Na): Purifies blood. Antacid.
Potassium (K): Cures hereditary rheumatism. Increases appetite. Removes muscular weakness and laziness.
Manganese (Mn): Germicidal, stops growth of germs, protects against decay due to gangrene.
Carbolic acid (HCOOH): Germicidal, stops growth of germs and decay due to gangrene.
Calcium (Ca): Blood purifier, bone strengthener, germicidal.
Salt (NaCl): Decreases acidic contents of blood, germicidal.
Vitamins A, B, C, D, E: Vitamin B is active ingredient for energetic life and saves from nervousness and thirst, strengthens bones and reproductive ingredient for energetic life and saves from nervousness and thirst, strengthens bones and reproductive power.
Other Minerals: Increase immunity.
Lactose (C6H12O6): Gives satisfaction., strengths heart, removes thirst and nervousness.
Enzymes: Make healthy digestive juices, increase immunity.
Water (H2O): It is a life giver. Maintains fluidity of blood, maintains body temperature.
Hipuric acid (CgNgNox): Removes toxins through urine.
Creatinin (C4HgN2O2): Germicide.
Aurum Hydroxide (AuOH): It is germicidal and increases immunity power. AuOH is highly antibiotic and anti-toxic.
ANBUDAN
KSR

Saturday, November 14, 2015

குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு - இரண்டாம் பாகம்

குழந்தை வளர்ப்பு - இரண்டாம் பாகம்

- சித்த மருத்துவர் அருண் சின்னையா (98840 76667)

நன்றி - சிறகு.காம்


சில நேரங்களில் இட்லியும், தோசையையும் குழந்தைகளுக்கு பழக்கப்படுத்துவதே நாம் தான் என்று சொல்லலாம். தரமான உணவுகளை நிறைய கொடுத்து பழக்கலாம். பழங்கள் கலந்த உணவுகளை நிறைய கொடுத்து பழக்கலாம். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு சிற்றுண்டி உணவாக Lays, Kurkure போன்றவற்றை தராமல் இருப்பது மிகவும் நல்லது. அதற்குப் பதிலாக பழங்களை நறுக்கி சிற்றுண்டி நேரங்களில் கொடுத்து பழக்கலாம். பள்ளி நிர்வாகமும் அதை ஊக்குவிக்கலாம். அதுமாதிரி செய்யும் பொழுது வரக்கூடிய இளைய தலைமுறைகளை, நல்ல ஆரோக்கியமான தலைமுறையாக நாம் கண்டிப்பாக மாற்ற முடியும். மூலிகைகளைக் கொடுத்து சளி, இருமல் போன்றவற்றை விரட்டுவதற்கான வேலைகளைச் செய்யலாம்.

Tonsils பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். 

Tonsil Operation அந்த வயதில் தேவையா?

6 வயதில் 7 வயதில் Tonsil Operation செய்தால் கூட மறுபடியும் ஐஸ்கிரீம் சாப்பிடும் பொழுது, கூல்டிரிங்ஸ் சாப்பிடும் பொழுது மறுபடியும் Tonsils வரக்கூடிய வாய்ப்பு உள்ளது, அது Primary Complex ஆக மாறலாம். Primary Complex என்றால் சிறுவர்களுக்கு உண்டாகக்கூடிய மூச்சு ஒவ்வாமை நோய். இதனால் நிறைய குழந்தைகள் அவதிப்படுகிறார்கள். 

ஒரு சில பெற்றோர்கள் தன்னுடைய தகுதியை விட்டுக்கொடுக்காமல் மருத்துவர்கள் என்ன சொல்கிறார்களோ அதற்கு ஏற்றார்போல் நல்ல வகையாக தலையாட்டக் கூடிய பெற்றோர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். தங்களுடைய தகுதிக்காகவே தன்னுடைய குழந்தைகளை பெரிய பெரிய மருத்துவமனையில் சேர்த்து அங்கு பார்த்து தன்னுடைய குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் கெடுக்கக் கூடிய பெற்றோர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். 

எனவே நம் முன்னோர்கள் பயன்படுத்திய மிக எளிமையான முறை நான் சொன்னது. துளசி, தூதுவலையைப் பயன்படுத்தலாம். கற்பூரவல்லி என்பது சாதாரணமாக வீட்டிலேயே தொட்டியிலேயே வளர்க்கலாம். கற்பூரவல்லி இலையில் மூன்று இலையை எடுத்து நன்றாக பிழிந்து சாறெடுத்து அதை குழந்தைகளுக்குக் கொடுத்துப் பாருங்கள் எப்பேற்பட்ட சளியாக இருந்தாலும் கண்டிப்பாக முழுமையாக சரியாகிவிடும்.

அதேபோல் சுக்கு, சாதாரணமாக கடைகளில் கிடைக்கக்கூடிய சுக்கு, மற்றும் சித்தரத்தை, அதிமதுரம் இம்மூன்றையும் சம அளவிற்கு (50 கிராம் அளவிற்கு) வாங்கி அதை ஒன்றிரண்டாக தட்டி வைத்துக் கொண்டு அதில் சிறிது எடுத்து தண்ணீரில் சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து பனவெல்லம் சேர்த்து அதை வடிகட்டி குழந்தைகளுக்குக் கொடுத்துப் பாருங்கள், பழக்கப்படுத்திப் பாருங்கள் கண்டிப்பாக இருமல், சளி அனைத்துமே முழுமையாக சரியாகிவிடும். இதெல்லாம் நாம தான் செய்ய வேண்டும். முதலில் இதை பிடிக்கவில்லை என்ற சூழல் இருக்கும், இதைக் குடித்தால் சரியாகும் என்று எடுத்துக் கூறும்பொழுது கண்டிப்பாக கேட்பார்கள். 

குழந்தைகளுக்கு தெளிவான பேச்சு வரவேண்டும் என்றால் சுத்தமான தேன் கொடுத்து பழக்கவேண்டும். நிறைய குழந்தைகளுக்கு தேன் கூட கொடுப்பது கிடையாது. ஜாம் வேண்டுமென்றால் நாம் குப்பி குப்பியாக வாங்கிக் கொடுப்போம் ஆனால் தேன் தரமாட்டோம். சுத்தமான தேனை வாங்கி நாக்கில் தடவிவிடுவது ஒரு அற்புதமான முறை.

Tonsils பற்றி நாம் பேசிக்கொண்டிருந்தோம்.கரிசிலாங்கன்னி கீரையின் பொடியையும், அதிமதுரத்தையும் சம அளவு கலந்து வைத்துக்கொண்டு இதை அரை தேக்கரண்டி அளவு தேனில் கலது காலை, இரவு என்று இரண்டு வேளை குழந்தைகளுக்குக் கொடுத்துக் கொண்டே வந்தோம் என்றால் Tonsils முழுமையாக சரியாகிவிடும், முழுமையாக குணமாகும். 

Primary Complex என்று சொல்லக்கூடிய மூச்சு ஒவ்வாமை நோய்க்கு குழந்தைகளுக்கு தூதுவலை, துளசி, ஆடாதொடா, கண்டங்கத்திரி, அதிமதுரம், சித்தரத்தை இந்தப் பொருட்களை சமஅளவு கலந்து தூள் செய்து வைத்துக் கொண்டு ஒரு மூலிகைக் கூட்டுப் பொடியாக இதை வைத்துக்கொள்ள வேண்டும். காலையில் அரைத்தேக்கரண்டி, இரவு அரை தேக்கரண்டி தேனில் கொடுத்துக் கொண்டே வந்தீர்கள் என்றால் கண்டிப்பாக Primary Complex சரியாகிவிடும்.

இல்லையென்றால் சித்தமருத்துவக் கடைகளில் கிடைக்கக் கூடியது திப்பிலி ரசாயனம். திப்பிலி ரசாயனம் என்பது அதே சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, அதிமதுரம், சீரகம், கரஞ்சீரகம், காட்டுச்சீரகம், வெள்ளை மிளவு, ஜாதிக்காய், ஜாதிபத்திரி, மாசிக்காய் இதெல்லாம் சேர்த்து செய்யக்கூடிய ஒரு அற்புதமான லேகியம். நல்ல காரமாக இருக்கும், இந்த லேகியத்தை ஒரு குழந்தைக்கு தொடர்ந்து கொடுத்தீர்கள் என்றால்மூச்சுத்திணறல் (Wheezing) சரியாகும்.

அம்மா, அப்பாவிற்குத்தான் தன்னுடைய குழந்தை Wheezing வரும்பொழுது தான் என்னாச்சோ, ஏதாச்சோ என்ற பதறல், பயம் எல்லாமே பெற்றோருக்கு வரத்தான் செய்யும். எனவே வரும் முன் காப்பதற்குத்தான் மூலிகை. வரும் முன் காப்பதற்குத்தான் சித்தமருத்துவம் என்பதை பெற்றோர்கள் உணர்ந்து, வருவதற்கு முன்பே கொடுக்க வேண்டும். எப்பொழுதுமே வளரக் கூடிய குழந்தைக்கு என்னவேண்டுமானாலும் கொடுக்கலாம் என்று சொல்லி கண்டதைக் கொடுத்து உடம்பைக் கெடுப்பதை முடிந்த அளவிற்கு தவிர்ப்பது நல்லது. அதே போல் குழந்தைகள் நலமேம்பாடைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கக் கூடிய food suppliments ஐ தயவுசெய்து தராதீர்கள். 

Food Suppliments ஐ நாமே பண்ணலாம். 

நவதானியங்கள் எள், கொள்ளு, பச்சைப்பயிறு, காராமணி, சுண்டல், வரகு, தினை, குதிரைவாலி, பாதாம், பிஸ்தா, முந்திரி, அக்ரூப்ட் இதெல்லாமே சேர்த்து ஒரு நவதானிய சத்து மாவுமாதிரி, சிறுதானிய சத்துமாவு மாதிரி நீங்கள் தயார் செய்து அதை உங்களுடைய குழந்தைகளுக்கு பழக்கப்படுத்தலாம். நீங்கள் கவர்ச்சி கரமான புட்டிகளில் வரக்கூடியவற்றை கொடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அதில் செயற்கையாக சில இராசாயனபொருட்கள், செயற்கையாக இருக்கக் கூடிய சில வைட்டமின்கள் எல்லாவற்றையும் கலந்து கொடுக்கும் பொழுது ஒவ்வாமை என்பது மிக எளிதாக உருவாகும். 

அதில் காபி சுவை, வெண்ணிலா சுவை இருக்கிறதால் மற்றும் இன்னும் சில சுவைகள் எல்லாம் சேர்ப்பதனால் குழந்தைகள் லயமாக சாப்பிடும், அப்படியே சாப்பிடுவேன் என்று சாப்பிட்டு அப்படியே வயிறு உபாதை உண்டாகி வயிறு கழிச்சலுக்கு உள்ளான குழந்தைகளின் எண்ணிக்கையை நான் அறிவேன். அந்தமாதிரி எல்லாம் இருக்கக்கூடாது. இந்த மாதிரி நவதானிய சத்துமாவு, சிறுதானிய சத்துமாவு தயார்செய்து அதை குழந்தைகளுக்கு இனிப்பு உருண்டையாக பணவெல்லம் சேர்த்து தொடர்ந்து செய்து கொடுக்கலாம். அந்த மாதிரி செய்து கொடுக்கும் போது நல்ல பலன் கிடைக்கும். 

சூடான பாலில் இந்த மாவை சேர்த்து நன்றாக காய்ச்சி, மறுபடியும் காய்ச்சி கஞ்சி மாதிரி கொடுத்து பழக்கலாம். ஆரோக்கியம் சார்ந்த முறைக்கு நல்ல active ஆன நல்லசத்து தரக்கூடிய ஊட்டமான உணவுகளைக் கொடுக்கும் பொழுது குழந்தையின் வளர்ச்சி ஒரே சீராக இருக்கும், எந்தத் தடங்கலும் இல்லாமலும் இருக்கும்.

10 வயது வரைக்கும் ஒரு குழந்தையை வளர்ப்பதற்குத்தான் நாம் சிரமப்பட வேண்டும். 10 வயதிற்குப்பிறகு அந்தக் குழந்தைக்கு endocrinology சிறிது சிறிதாக அபிவிருத்தியாக ஆரம்பித்துவிடும். அதாவது ஒரு குழந்தை மழலைக்குரலில் கீச்சுக்குரலில் அம்மா,அப்பா என்று ஒரு பெண் பேசுவது போல பேசிய ஒரு பையன் திடீரென்று குரல் உடையக் கூடிய சூழல் 10 வயதிற்குப் பிறகு பார்த்தோம் என்றால் அந்த மழலைக்குரல் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து முகத்தில் லேசாக மீசை அரும்புவது இந்த மாதிரி முடியெல்லாம் வளர ஆரம்பிக்கும் பொழுது நாளமில்லா சுரப்பு மண்டலம் தூண்டப்படுகிறது. 

அந்த மாதிரி நாளமில்லா சுரப்பி தூண்டும்பொழுது அவனுக்கென்று தனியாக ஒரு ஆளுமை வரும் வரைக்கும் ஒரு குழந்தையை குழந்தையாக வளர்ப்பது, குழந்தைக்கான ஆரோக்கியத்திற்கு நல்ல உணவுகளையும், நல்ல மூலிகைகளையும் மருந்தாக மாற்றிக் கொடுப்பது எல்லாமே பெற்றோர்கள் செய்யக்கூடிய கடமை. 

கண்ட கண்ட மருந்துகளைக் கொடுப்பது, அடிக்கடி குழந்தைக்கு காய்ச்சல் வருகிறது என்பதற்காக நிறைய ஊசிகள் போடுவது இதெல்லாம் தேவையில்லாத ஒரு செயல். எப்பொழுதுமே ஒரு குழந்தைக்கு காய்ச்சல் வருவது, தலைவலி வருவது, வாந்தி-பேதியாவது இயல்பாக வரக்கூடிய ஒன்று. இது எல்லாமே வருகிறது என்றால் அந்தக் குழந்தைக்கு ஏதோ ஒரு ஒவ்வாமை இருக்கிறது என்று தான் அர்த்தம். அந்த ஒவ்வாமை என்பது உணவு ரீதியாகத்தான் வருகிறது என்பதை ஒவ்வொரு பெற்றோரும் முழுமையாக தெளிவாக உணர்ந்துகொண்டு அவர்களுக்குத் தரவேண்டிய உணவுகளை முறையாக பட்டியலிடவேண்டும்.

# ஒரு குழந்தைக்குத் தரக்கூடிய உணவில் கண்டிப்பாக கீரை அவசியம் இருக்க வேண்டும்.

# ஒரு குழந்தைக்குக் கொடுக்க வேண்டிய உணவில் உலர் பருப்புகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். 

# ஒரு குழந்தைக்குத் தரக்கூடிய உணவுகளில் கோதுமை சார்ந்த உணவுகள் நிறைய வரவேண்டும், 

# சிறுதானியம் சார்ந்த உணவுகள் நிறைய வரவேண்டும்.

# இட்லி ஓரளவிற்கு வரலாம். இடியாப்பம் வரலாம், அதீதமாக தரக்கூடிய தோசையின் அளவை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. 

மிக எளிமையாக வேலை முடியவேண்டும் என்பதற்காக வாரத்திற்கு ஒரு நாள் தோசைக்கு மாவை ஆட்டி அதை ஒரு வாரம் பயன்படுத்தக் கூடிய தாய்க்குலங்கள் தமிழ்நாட்டில் ஏராளமாக உண்டு. எப்பவுமே காலை என்றாலே இரண்டு தோசை. இரண்டு கரண்டி மாவை லேசாக எண்ணெய் போட்டு தடவிக் கொடுத்தால் அதற்குப் பெயர் தோசை என்று கொடுத்தோம் என்றால் கண்டிப்பாக அதில் சத்து வராது.

பள்ளிக்குக் கொடுக்கக்கூடிய சிற்றுண்டிகள், புளித்த மாவில் செய்த தோசை, மதியம் கொண்டு சென்ற தயிர்சாதம் எல்லாமே சேர்ந்து கபத்தை அதிகப்படுத்தும். கபம் அதிகமாகும் பொழுது கண்டிப்பாக குழந்தைகள் தடுமாறுவார்கள், திணறுவார்கள், செறிவு (concentration) மாறும், எனவே நிறைய சிக்கல்கள் வரக்கூடிய ஒரு சூழல் உண்டு. ஆக நான் சொன்ன உணவுப் பொருட்களையும், மருந்துப்பொருட்களையும் பெற்றோர்கள் பழக்கப்படுத்துங்கள். 

பத்து வயது வரையும் அவர்கள் குழந்தைகள் தான். அந்த மழலை அமுதத்தை ஒழுங்காக முறையாக பாவித்து ஆரோக்கியமான ஒரு வாழக்கைக்கு அடித்தளம் செய்து கொடுத்தீர்கள் என்றால் அவர்கள் பருவத்துக்கு போகும் பொழுது நல்ல தெளிவான மனநிலையோடு ஆரோக்கியமான சூழலோடு அவர்களுக்கான எதிர்காலத்தை அவர்களே நிர்ணயிக்கக் கூடிய சூழல் கண்டிப்பாக உண்டாகும். 

எனவே குழந்தைகளின் ஆரோக்கியம் பெற்றோர்கள் நினைத்தால் கண்டிப்பாக சாத்தியமாகும். நிறைய மருந்துகள் சொல்லியிருக்கிறேன், தொடர்ந்து பயன்படுத்துங்கள்.