Thursday, August 4, 2016

இஞ்சி


இஞ்சி – சமையலறை மருத்துவர்

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

9. இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.

10. இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.

11. இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.

12. இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.

13. இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.

14. இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.

15. இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.

16. இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.
++++++++++++++++++++++++++++++
சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் - விஞ்ஞானயின் ஆச்சரியமான உண்மை சம்பவம் !

இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எளிமையாக மிக குறைந்த செலவில் திருப்ப பெற்ற ஒரு விஞ்ஞானயின் உண்மை சம்பவம் என்பதாலும், தேதி வாரியாக செயல்பாடுகள் (ஆங்கில வலைப்பூவில் அவரது மகன் ) பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், மற்றவர...்களுக்கு நிச்சயம் பயனளிக்குமென்பதாலும் இதனை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இன்று எதுவென்றாலும் மருத்துவமனை, மாத்திரைகள், மருந்துகள் என்று இன்றைய சமூகம் உள்ளது. ஒரு சிறு தலைவலி போல் இருந்தால் கூட உடனடி மாத்திரை. உணவே மருந்து என்று வாழ்ந்த தமிழன், இன்று மருந்தே உணவு என்று வாழ்கிறான் என்று சிலர் கூறுவது உண்மையாகத்தான் உள்ளது.

கடந்த சில வருடங்களாக நமது ஊரில், குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிறுநீரக செயலிழப்பு (Kidney failure) அதிகம் நடைபெறுகிறது. இதற்கு பல பெரிய வைத்தியர்கள் கொண்டு பல ஆயிரங்கள் செலவு செய்தும் முழு பலன் அடைவதில்லை.

இங்கு முழுவதுமாய் செயலிழந்த, இன்றைய தொழிற்நுட்ப வைத்தியர்களால் இனி ஒன்றுமே செய்ய இயலாது என்று கை விடப்பட்ட ஒர் சிறு நீரகத்தின் செயல்பாட்டை 5%திலிருந்து 80%மாய், இரண்டே மாதத்தில் மாற்றிய ஒர் கதையை இங்கு கூறுகிறேன். நான் கதையென்று சொன்னவுடன், ஏதோ கட்டு கதையென்றோ, எங்கெனும் புத்தகத்தில் படித்தது என்றோ நினைக்க வேண்டாம். இது நானே அருகில் அமர்ந்து கண்டு வியந்த உண்மை.

மதுரையில் எனது பேராசிரியர் திரு. சண்முகம் அவர்களுக்கு 2006ல் திடீரென்று சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரது சிறுநீரக செயல்பாடு 5%க்கும் (ஒரு நாளைக்கு 50 மில்லி லிட்டர் சிறுநீர் வெளியேற்றம்) கீழ் சென்றுவிட்டது. இந்த செயலிழப்புக்கு முக்கிய காரணம் அவர் கொழுப்பை (Cholesterol) கட்டுபடுத்த உட்கொண்ட ஒரு வகை மருந்துகள் (statin drugs) என்பது தனிக்கதை.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியபின் தினமும் மூன்று முறை பெரிடொனியல் டயாலிசிஸ் (Peritoneal dialysis) அவரே செய்து கொண்டார். டயாலிசிஸினால் அனைத்துச் சத்துக்களும் ஊறியப் பெற்று துரும்பாய் இளைத்து, நடக்க கூட சக்தியின்றி சோர்ந்து போனார். அவரது மகன் திரு.பாரி அவர்கள் கணிணி வல்லுநராக இருந்தாலும் ஆன்மீகம், யோகா, இலக்கியம், சுற்றுபுறவியல் போன்றவற்றில் அதிக ஈடுபாடு உள்ளவர்.

அவர் இயற்கை வழியின் படி, பழங்கால மருத்துவத்தில் கூறியுள்ள இஞ்சி ஒத்தட முறையை தந்தைக்கு கூறினார்.

எனது பேராசிரியர் அடிப்படையில் ஒர் ஆய்வாளர் என்பதால், தன் சிறு நீரகத்தையே ஆய்வு பொருளாய் கொண்டு இந்த இயற்கை வழியை பரிசோதித்தார். ஆம் உண்மையிலேயே அவர் ஆய்வுதான் செய்தார்,

தினமும் எவ்வளவு சிறுநீர் வெளியெறுகிறது என்று அளந்து, குறித்து வைப்பார். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, சிறுநீரை ஆய்வகத்திற்கு அனுப்பி அதிலுள்ள, அனைத்து சத்து மற்றும் உப்பு பொருட்களின் அளவை அறிந்து அதையும் ஆய்வு செய்வார்.

மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுக் கட்டுப்பாட்டையும் கடுமையாக பின்பற்றினார். இதன்மூலம் இரண்டே மாதத்தில் சிறுநீரக செயல்பாடு தினமும் 50 மில்லிலிட்டர் (5%) சிறுநீரக வெளியேற்றத்திலிருந்து 650-700 மி.லி சிறுநீர் (80%) வெளியேற்றம் என்று தனது செயல்பாட்டை திரும்ப பெற்று, இன்று முழுவதும் குணமடைந்துள்ளார்.

இஞ்சி ஒத்தடம்:
=============

இஞ்சி ஒத்தட முறையை கீழே விரிவாக கூறியுள்ளேன். எனது ஆசிரியருக்கு சில மாதங்கள் நானே, இந்த ஒத்தடம் கொடுத்து உள்ளேன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.

1. ஒரு பானையில் மூன்று லிட்டர் நீரை கொதிக்க வைக்கவும்.

2. 125கி இஞ்சியை துண்டு துண்டாக நறுக்கி, மிக்சி அல்லது அம்மியில் அரைத்து கொள்ளவும்.

3. அரைத்த இஞ்சியை ஒரு துணியில் சிறு மூட்டை போல் கட்டவும்.

4. இப்போழுது கொதிக்கும் நீரில் இஞ்சிச் சாரை நன்கு பிழிந்துவிட்டு,
துணி முடிச்சையும் போட்டு ஒரு தட்டை கொண்டு மூடவும்.

5. அடுப்பை குறைந்த எரி நிலையில் (சிம்) 20 – 25 நிமிடங்கள் வைக்கவும்.

6. பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மூடிய நிலையிலே 5 நிமிடங்கள் விடவும்.

7. சிகிச்சைக்கான நபரை சட்டையை கழற்றிவிட்டு தலைக்குப்புற படுக்க சொல்லவும்.

8. பிறகு ஒரு சிறு துணியை, கொதிக்கும் இஞ்சி நீரில் நனைத்து புழிந்து, வேறு ஒரு கிண்ணத்தில் புழியவும். அந்த துண்டை சிறுநீரகம் அமைந்துள்ள முதுகின் அடிபகுதியில் விரித்து போடவும்.

9. சூடு தணிந்தவுடன் துணியை மீண்டும் நனைத்து, விரித்து தொடரவும். இவ்வாறாக நீர் ஆ றும் வரை தொடர்ந்து அரை மணி நேரம் செய்யவும்

Monday, August 1, 2016

மனமும் உடலும்

🌹 #மனமும் #உடலும் 🌹

🌴நம் உடலானது  உயிரை தக்க வைத்துக் கொள்வதற்காக 24 மணிநேரமும் போராடுகின்றது.

🌴நாம் எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும் நம் உடல் நமக்காக வேலை செய்து கொண்டே இருக்கும்.

🌴என்ன உணவுக்கு என்ன இரசாயனம் சுரக்க வேண்டும். எதை கொழுப்பாக மாற்ற வேண்டும். எதை இரத்தத்தில் இருந்து பிரிக்க வேண்டும் போன்ற பல தகவல்கள் ஒவ்வொரு செல்களிலும் உள்ளது.

🌴நாம் உடலை பற்றி என்ன யோசித்தாலும் அதை உடனே நம் உடல் செயல்படுத்த ஆரம்பித்துவிடும்.

🌴உதாரணமாக நீங்கள் படுத்துக்கொண்டு, ஓடுவதாக கற்பனை செய்தால் உடனே உடல் அதை உண்மை என நம்பி அதற்கு தேவையான அனைத்து தசைகளையும் இயக்க ஆரம்பித்துவிடும்.

🌴ஆம் உடலை மனதால் ஏமாற்றிவிடலாம். நீங்கள் நம்ப முடியாத ஒரு விடயத்தை இங்கே கூற போகிறேன்.

🌴நீங்கள் தினமும் ஒரு அரைமணி நேரம் படுத்துக்கொண்டு, வெறும் கற்பனையால் யோகாசனம் செய்வதாக நினைத்தாலே போதும். நீங்கள் யோகா செய்தால் என்ன பலனோ அதே பலன் இதிலும் கிடைத்துவிடும்.

🌴ஆம் சூரிய நமஸ்காரம் ஒவ்வொன்றாக செய்வதாக மனதில் ஆழ்ந்து நினைத்துவந்தாலே போதும்.

🌴மனதிற்குள் புக முடிந்தால் உடலுக்குள்ளும் புக முடியும்✋🏼

💥💥

Sunday, July 31, 2016

வாத எண்ணெய்


வாதஎண்ணெய்::::
#எண்பதுவகைவாதங்களும்அனைத்துசூலைநோய்களும்மருத்துவர்களால்கைவிடப்பட்டநோய்கள்கூடகுணமாகும்::::

௧) #எண்ணெய்கள்
நல்லெண்ணெய் ... நூறு மில்லி
வேப்ப எண்ணெய் ...நூறு மில்லி
விளக்கெண்ணெய் ...நூறு மில்லி
௨)#காடிநீர்
புளித்த காடி நீர்
அதாவது புளித்த பழைய சோற்று நீர்
நீத் தண்ணீர் நீச்சதண்ணீர் என்றும் கூறுவார் )
௩)#மருந்துப்பொருட்கள்
சுக்கு, மிளகு, திப்பிலி, பூண்டு, ஓமம், பெருங்காயம், கிராம்பு, வசம்பு, சதகுப்பை

௪) மருந்து சாப்பிட நாட்டுப் பசும்பால்

வாத எண்ணெய் செய்யும் முறை

அ) மேற்கூறிய ஒன்பது மருந்துப் பொருட்களையும் சம அளவு அதாவது ஒவ்வொன்றிலும்  பதினைந்து கிராம் அளவுக்கு எடுத்து சேர்த்து அரைத்து சூரணமாக ஆக்கிக்கொள்ளவும்

ஆ) இந்த சூரணத்தில்  நான்கு தேக்கரண்டி அளவு எடுத்து
அதை புளித்த காடி (பழைய சோற்று நீர் புளித்தது )ஊற்றி
நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்

இ) வாணலியை அடுப்பிலேற்றி முதலில் நல்லெண்ணெய் ஊற்றி நன்கு கொதித்ததும் வேப்பெண்ணெய் ஊற்றிக் கலந்து கொதிக்கவிட்டு நன்கு கொதி வந்தபின்  விளக்கெண்ணெய் ஊற்றிக் கலந்து நன்கு கொதிக்க விட வேண்டும்

மூன்று எண்ணெய்களும் ஒன்றாக உறவாடி நன்கு கலந்து கொதித்த பின் நாம் ஏற்கெனவே அரைத்து வைத்துள்ள மருந்து விழுதைச்
சிறிது சிறிதாகப் போட்டுக் கிளறி நன்கு கொதிக்க விட வேண்டும்
இவ்வாறு நன்கு கொதித்துக் கொண்டிருக்கும் வேளையில்
அத்துடன் ஒரு தேக்கரண்டி புளித்த காடி நீரை ஊற்றிக் கிளறவும்
நன்கு கொதிக்க விடவும் நுரை அடங்கி வரும் நுரை அடங்கி விட்டால் சரியான தைலப் பதம் வந்து விட்டது என்று பொருள்.
இறக்கி வடி கட்டி ஆற வைத்து ஒரு பாட்டிலில் சேமிக்கவும்
இந்த்த முழு செயலையும் சிறுதீயில் செய்ய வேண்டும்

இவ்வாறு கிடைத்த எண்ணெய்க்கு வாத எண்ணெய் என்று பெயர்

ஈ) வாத எண்ணெயை மருந்தாக சாப்பிடும் முறை

உள் மருந்தாக நூறு மில்லி நாட்டுப் பசும்பாலை நன்கு கொதிக்க வைத்து இறக்கி குடிக்கும் அளவுக்கு இளஞ்சூட்டில் இருக்கும்போது
அந்தப் பாலுடன் அரை தேக்கரண்டி வாத எண்ணெயை ஊற்றிக் கலந்து  உணவுக்குப் பின் அரை மணி நேரம் கழித்து காலை மாலை என தினமும் இரண்டு வேளை குடித்து  வர வேண்டும்

வெளி மருந்தாக இந்த வாத எண்ணெயை தினமும் இரவில் கை கால்களில் தேய்த்து மென்மையாக மசாஜ் செய்து மறு நாள் காலையில் இளம் வெந்நீரில் குளிக்க வேண்டும்

இவ்வாறு தினமும் செய்து வர எண்பது வகை வாதங்களும்
அனைத்து சூலை நோய்களும் மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்கள் கூட குணமாகும்.

நடுக்கு வாதம்
முடக்கு வாதம்
கீல்வாதம்
நரித்தலைவாதம்
ஆமைவாதம்
பக்கவாதம்
கைகால்கள் வீக்கம் / வலி
போன்ற அனைத்து வாத நோய்களும், அனைத்து சூலை நோய்களும் குணமாகும்

இது ஒரு இரகசிய எளிய அனுபவ வீட்டு மருந்து ஆகும். இந்த தமிழ் மருத்துவம் அழிந்து விடக் கூடாது. அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்ற உன்னத நோக்கில் இந்த இரகசிய மருந்து
தயாரித்துப் பயன்படுத்தும் முறையை வெளிப் படுத்தி உள்ளோம்.

Saturday, July 30, 2016

இருமல்

இருமல் என்பது என்ன?
ஏன் ஏற்படுகிறது?...

நுரையீரலின் இயக்கக் குறைவு காரணமாக அவற்றில் தேங்கியிருக்கும் சளிக் கழிவை வெளியேற்றும் முயற்சிதான் இருமல்!

சளி எப்படி நுரையீரலில் தேங்கியது?

• நுரையீரலுக்கு நேரடியான பாதிப்பை ஏற்படுத்தும் புகைப் பழக்கம் அதன் இயக்கக் குறைவிற்கு காரணமாகலாம்.

• உடல் ஏற்றுக் கொள்ள முடியாத குளிர் தன்மையில் சாப்பிட்ட உணவால் நுரையீரல் பலவீனமடையலாம்.

• நம்மால் செரிக்கவே முடியாத கடினப் பொருளான பாலை அதிக அளவில் பயன் படுத்துவதால் நுரையீரலின் சக்தி குறையலாம்.

• அன்றாடம் வெளியேற்றப் படாத மலக்குடல் கழிவுகள் நுரையீரலின் பணியை பாதிக்கலாம்.

• பசியற்றிருக்கும் போது உண்ணும் உணவு காற்றுக் கழிவாக மாற்றப்பட்டு, நுரையீரலை வந்தடையலாம்.

…இப்படி காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் அடிப்படை ஒன்று தான்.

நம் இயற்கை விதி மீறிய செயல்களால் நுரையீரல் பாதிப்படைந்து தன் தலையாய கடமையான கழிவுகளை வெளியேற்ற முடியாமல் திணறுகிறது.

இந்நிலையில் போதிய எதிர்ப்பு சக்தி உடலிற்கு கிடைக்கும்போது அது தன் வேலைக்குத் திரும்புகிறது. காய்ச்சப் படாத தூய தண்ணிரை அருந்தும் போது, நல்ல பழங்களை உண்ணும் போது, துய்மையான நீரான மழையில் முழுவதுமாக நனையும் போது உடல் பூரண எதிர்ப்பு சக்தியைப் பெறுகிறது.

எங்கெல்லாம் கழிவுத் தேக்கம் உள்ளதோ அதை நீக்க முயல்கிறது.
இப்படி எதிர்ப்பு சக்தி வலுவடையும் போது, நுரையீரல் தன் சளிக் கழிவை வெளியேற்ற முயலும்.
எப்படி வெளியேற்றும்?

சிறு குழந்தைகளாக இருந்தால் நுரையீரலின் சளி வாந்தி மூலமாகவும், மலம் மூலமாகவும் சிறிது சிறிதாக வெளியேறும். சளியின் அளவு அதிகமென்றால், இருமலைத் தோற்றுவித்து அதன் மூலம் வெளியேறும்.

பெரியவர்களுக்கு வாந்தி மூலமும், மலம் மூலமும் சளி வெளியேறுவது குறைவு. எனவே தான் இருமல் மூலம் வெளியேற்றுகிறது உடல்.
நுரையீரலில் தேங்கிய சளி உள்ளேயே இருப்பது நல்லதா? அல்லது வெளியேற்றப்படுவது நல்லதா?

கழிவுகள் வெளியேற்றப்பட வேண்டியவை. அவை உடலிலேயே தங்க நேரிட்டால் ஒவ்வொரு உறுப்பையும், அதன் இயக்கத்தையும் பாதிக்கும்.

நாம் இருமலைத் தான் நோயாக கற்பனை செய்கிறோம். இன்னும், வெளியேற வேண்டிய சளியை, இருமலை அடக்குவதன் மூலம் பாதுகாக்க முயற்சிக்கிறோம்.
நாம் ஒன்றும் செய்யாமலிருந்தால், சளி தானாகவே இருமல் மூலம் வெளியேறி விடும். பின்பு இருமல் குறைந்து நுரையீரல் தன்னிலைக்குத் திரும்பும்.
ஆனால் நாம் சும்மா இருப்பதில்லை!

ரசாயன மருந்துகளைக் கொண்டு இருமலை அடக்குகிறோம்.
என்ன செய்கின்றன இந்த மருந்துகள்?

நுரையீரலில் திரவ வடிவில் வெளியேறத் தயாராக இருக்கும் சளியை இந்த ரசாயன மருந்துகள் வெப்பத்தை ஏற்படுத்தி உலரச் செய்கிறது. திரவ வடிவச் சளி இப்போது காய்ந்து விடுவதால் இருமல் வறட்டு இருமலாக மாறுகிறது.

"சளி நின்றுவிட்டது" என்று நாம் மகிழ்ச்சியடைகிறோம். தொடர்ந்து வெப்பத்தை ஏற்படுத்தும் மருந்துகளால் காய்ந்த சளி துகள்களாக (Powder) பொடியாக்கப்பட்டு நுரையீரலின் நுண் துளைகளில் படிய வைக்கப்படுகிறது.

சளி தற்காலிகமாக உருவ மாற்றம் அடைந்து விடுவதால்  ஒன்றிரண்டு நாட்களில் இருமல் முற்றிலும் நின்று போய் விடுகிறது.

இது தான் நாம் மேற்கொள்ளும் சிகிச்சையின் விளைவு.
அப்படியானால், காய்ந்து, உறைந்து போன சளி என்னவாகும்?.

பத்திரமாக உடலிலியே தங்கியிருக்கும். எப்போது வரை?
எதிர்ப்பு சக்தி கிடைக்கும் வரை.
நாம் சளிக்காகச் சாப்பிட்ட ரசாயன மருந்துகளை உடல் முதலில் வெளியேற்றி எஞ்சிய நச்சுக்களை கல்லீரலின் துணை கொண்டு சேமிக்கிறது.

படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பும் உடல், நல்ல உணவு, நல்ல நீர், சக்தியுள்ள பழங்கள் போன்றவற்றிலிருந்து ஆற்றலை உள்வாங்கி மீண்டும் எதிர்ப்பு சக்தியைத் தயார் செய்கிறது.
இப்படி எதிர்ப்பு சக்தி தயாராவதற்கு ஒரு வாரம் முதல் பல ஆண்டுகள் வரை கூட ஆகலாம். மீண்டும் கழிவு வெளியேற்றப் பணி துவங்குகிறது.

முன்பாவது, சளியை வெளியேற்றும் வேலை மட்டும் தான் இருந்தது. இப்போதோ நுரையீரலின் நுண்துளைகளில் அடைத்துக் கொண்டுள்ள உலர்ந்த துகள்களை ஈரப்படுத்தி பின்பு சளியாக மாற்றி வெளியேற்ற வேண்டியிருக்கிறது.

இப்போதுதான் இருமலோடு நெஞ்சு எரிச்சல், சளியோடு ரத்தத்துகள் வருதல் போன்றவை ஏற்படும். ரசாயனத்திற்கு பின்பான இந்தக் கழிவு வெளியேற்றம் முன்பை விட கடுமையானதாகவும் பலமானதாகவும் இருக்கும்.

இப்போது நாம் புதிதாக சளிப் பிடித்துக் கொண்டதாகக் கூறுகிறோம். மழையில் நனைவதாலோ பழங்கள் சாப்பிடுவதாலோ அல்லது காய்ச்சாத நல்ல நீர் குடிப்பதாலோ சளி பிடிப்பதில்லை.

ஏற்கனவே நம் முயற்சியால் உடலில் அடைத்து வைக்கப்பட்ட அதே சளி மீண்டும் வெளியேறுகிறது என்பதை நாம் உணர்வதே இல்லை.

இப்போதும் இருமலை நிறுத்த எல்லா வழி முறைகளையும் பின்பற்றுகிறோம். மருந்துகளால் சளியை காய்ந்த துகள்களாக்கி நுரையீரலில் மீண்டும் சேமித்து வைக்கிறோம்.

இதே நிலை தொடரும் போது குழந்தைகளுக்கு பிரைமரி காம்ப்ளக்ஸ் (முதல்நிலை சளி?) ஏற்படுகிறது. பெரியவர்களுக்கு காச நோய் (Tuberculosis), ஆஸ்துமா (Asthma), ஈசினோபிலியா (Eosinophilia), போன்ற இரண்டாம் கட்ட முற்றிய நோய்களாக மாறிவிடுகிறது.

தும்மலை அடக்குவோமானால் சைனஸ் உருவாகிறது. நிரந்தரத் தலைவலி, காரணமற்ற மைக்ரேன் தலைவலி, ஒற்றைத் தலைவலி
... என அனைத்தும் ஒவ்வொன்றாய் ஏற்படுகிறது.
இன்னும் அடுத்தடுத்த நிலைகளில் தோல் வழியாக செதில்படை நோய் (Eczema), செதில் உதிர்தல் (Psoriasis), படர்தாமரை (Ringworm) போன்ற வெளிப்பாடுகளும் நிகழ ஆரம்பிக்கும்.

இவை அனைத்துமே எதிலிருந்து தோன்றியது?
1. இயற்கை விதி மீறல்
2. உறுப்புக்களின் இயக்க குறைவு
3. கழிவுகளின் தேக்கம்
4. மருந்துகளால் கழிவுகளை அடைத்து வைத்தல்
5. ரசாயனங்களால் கழிவுகளை உருமாற்றுதல்

... போன்ற தொடர் நிகழ்ச்சிகளின் மூலம் நமக்கு நாமே நோய்களை சம்பாதித்துக் கொள்கிறோம்!

இயற்கை விதி மீறலை சரி செய்ய முயற்சி செய்யும் உடலை நாம் தொடர்ந்து தொல்லைக்கு உள்ளாக்குகிறோம். நாம் என்ன செய்தாலும் உடல் ஒன்றை மட்டுமே செய்து வருகிறது.

அது தான் கழிவு வெளியேற்றச் செயல்!
உடல் எப்போதுமே கடமை தவறுவதில்லை.

 மனித வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களுக்கும், நோய்களுக்கும் காரணம் அவனது உயிரில் உள்ள புரோகிராம் செய்யப்பட்ட நல்ல / பாவ பதிவுகளே காரணம் என நமது சித்தர் பெருமக்கள் கூறுகின்றனர்.

ஒரு கம்ப்யூட்டர் செயல்பட நம்மால் செய்யப்பட்ட புரோகிராம் செய்த சாப்ட்வேர்கள் அதில் பதியப்பட்டு அது எப்படி இயங்குகின்றதோ அதுபோல நமது வாழ்க்கை செயல்பட நம்மால் செய்யப்பட்ட வினைப்பதிவுகளே (புரோகிராம்களே) நம்முள் பதியப்பட்டு நாம் இயங்க காரணம் ஆகின்றது.

அதுபோல வியாதி என்பது செல்களில் உள்ள டி.என்.ஏ வில் உள்ளது.
அது கண்ணுக்கும், புறக்கருவிக்கும் எப்போதும் தெரியாது.
அதில் ஒன்று எழுந்தாலும், உயிரில் காட்டும்.

அது கண்ணுக்கும், கருவிக்கும், தெரியாது,
அந்த ஒன்றை வைத்து குறி மூலம் ஆன்மா பாதிப்பை உணர்ந்துக் கொள்ள முடியும், அந்த குறியை வைத்து தான் வியாதியை கண்டுபிடிக்கணும். ஏனென்றால் ஆன்மாவிற்கு வேறு வழியில்லை.

ஆகவே தான் அந்த குறிக்கு தக்க மருந்துகளை மருத்துவர்களின் அனுபவத்தில் நோய்க்கு ஏற்றவாறு கொடுக்க வந்த நோய் தற்காலிகமாக போய் விடும்.

இயற்கையான,மரபணு மாற்றம் இல்லா உணவுகளை உண்டு நிம்மதியாக வாழ்வோம்.

பகிர்வது மிக அவசியம்

Thursday, July 28, 2016

Nothing is Solid / Real

Nobel Prize winning physicists have proven beyond doubt that the physical world is one large sea of energy that flashes into and out of being in milliseconds, over and over again.

Nothing is solid.

This is the world of Quantum Physics.

They have proven that thoughts are what put together and hold together this ever-changing energy field into the ‘objects’ that we see.

So why do we see a person instead of a flashing cluster of energy?

Think of a movie reel.

A movie is a collection of about 24 frames a second. Each frame is separated by a gap. However, because of the speed at which one frame replaces another, our eyes get cheated into thinking that we see a continuous and moving picture.

Think of television.

A TV tube is simply a tube with heaps of electrons hitting the screen in a certain way, creating the illusion of form and motion.

This is what all objects are anyway. You have 5 physical senses (sight, sound, touch, smell, and taste).

Each of these senses has a specific spectrum (for example, a dog hears a different range of sound than you do; a snake sees a different spectrum of light than you do; and so on).

In other words, your set of senses perceives the sea of energy from a certain limited standpoint and makes up an image from that.

It is not complete, nor is it accurate. It is just an interpretation.

All of our interpretations are solely based on the ‘internal map’ of reality that we have, and not the real truth. Our ‘map’ is a result of our personal life’s collective experiences.

Our thoughts are linked to this invisible energy and they determine what the energy forms. Your thoughts literally shift the universe on a particle-by-particle basis to create your physical life.
Look around you.

Everything you see in our physical world started as an idea, an idea that grew as it was shared and expressed, until it grew enough into a physical object through a number of steps.

You literally become what you think about most.

Your life becomes what you have imagined and believed in most.

The world is literally your mirror, enabling you to experience in the physical plane what you hold as your truth … until you change it.

Quantum physics shows us that the world is not the hard and unchangeable thing it may appear to be. Instead, it is a very fluid place continuously built up using our individual and collective thoughts.

What we think is true is really an illusion, almost like a magic trick.

Fortunately we have begun to uncover the illusion and most importantly, how to change it.
What is your body made of?

Nine systems comprise the human body including Circulatory, Digestive, Endocrine, Muscular, Nervous, Reproductive, Respiratory, Skeletal, and Urinary.

What are those made up of?

Tissues and organs.

What are tissues and organs made of?

Cells.

What are cells made of?

Molecules.

What are molecules made of?

Atoms.

What are atoms made of?

Sub-atomic particles.

What are subatomic particles made of?

Energy!

You and I are pure energy-light in its most beautiful and intelligent configuration. Energy that is constantly changing beneath the surface and you control it all with your powerful mind.

You are one big stellar and powerful Human Being.

If you could see yourself under a powerful electron microscope and conduct other experiments on yourself, you would see that you are made up of a cluster of ever-changing energy in the form of electrons, neutrons, photons and so on.

So is everything else around you. Quantum physics tells us that it is the act of observing an object that causes it to be there where and how we observe it.

An object does not exist independently of its observer! So, as you can see, your observation, your attention to something, and your intention, literally creates that thing.

This is scientific and proven.

Your world is made of spirit, mind and body.

Each of those three, spirit, mind and body, has a function that is unique to it and not shared with the other. What you see with your eyes and experience with your body is the physical world, which we shall call Body. Body is an effect, created by a cause.

This cause is Thought.

Body cannot create. It can only experience and be experienced … that is its unique function.
Thought cannot experience … it can only make up, create and interpret. It needs a world of relativity (the physical world, Body) to experience itself.

Spirit is All That Is, that which gives Life to Thought and Body.

Body has no power to create, although it gives the illusion of power to do so. This illusion is the cause of much frustration. Body is purely an effect and has no power to cause or create.
The key with all of this information is how do you learn to see the universe differently than you do now so that you can manifest everything you truly desire.

Wednesday, July 27, 2016

கற்றாழை

கற்றாழை (Aloe vera)

கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது. இயற்கையான மருத்துவப்பொருட்கள் நமக்கு தான் நிறைய தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறியவைக்க ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும். கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவக் குணங்கள்.

கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது.

கற்றாழை உலகம் பூராவும் பயன்படுத்தப்படும் காஸ்மெட்டிக் பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறு கற்றாழை மட்டிலும் மருத்துவத்திற்கும், காஸ்மெட்டிக் பொருள் தயாரிப்பதிலும் முதலிடம் பெறுகிறது. சிறு கற்றாழை சோற்றுக் கற்றாழ என வழங்கப்படுகிறது.

சோற்றுக் கற்றாழ மடல்களப் பிளந்து நுங்குச் சுளை போல உள்ள சதைப் பகுதியை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நல்ல தண்ணீரில் 7- 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்தவேண்டும். கற்றாழையக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் வெறுட்டல் குணமும், கசப்பும் குறைந்துவிடும்.

தாம்பத்திய உறவு மேம்பட

சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்து கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்தாகும்.

கூந்தல் வளர

சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, இதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.

கண்களில் அடிபட்டால்

கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும். கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து, ஒரு துணியில் முடிச்சுக் கட்டி, தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதைச் சேகரம் செயது; எடுத்துக்கொண்டு, இதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால், கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும்.

குளிர்ச்சி தரும் குளியலுக்கு

மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க, சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை அரக்கிலோ தயாரித் ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான வாசனையக் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சிதரும் ஆயில் ஆகும்.

முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.

ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் ‘உடனடி டாக்டர்’ கற்றாழைச் சாறுதான்.

இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.

தோலோடு கற்றாழையை பச்சை மஞ்சளோடு சேர்த்து மைய அரைத்து முகம் கழுத்து கை கால்களில் தடவி சில மணி நேரத்துக்குப் பின்னர் வெந்தய நுரை கொண்டு தேய்த்து குளித்தால் உடல் பளபளப்பாகும். தோல் நோய் வராது. கற்றாழை கழியைத் தலை முடியில் தடவி சீவினால் மடி கலையாது. தலையின் சூடும் குறையும். உடல் குளிர்ந்து காணப்படும்.

பிரயாணக் களைப்பினால் சோர்வுற்ற கால்களுக்கு கற்றாழை சாறைத் தடவலாம். சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து ஈரப்பதம் அளிக்கும். எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது. முகத்தின் சுருக்கங்களைப் போக்கி புத்துணர்ச்சியையும் இளமைப் பொலிவையும் தக்க வைத்துக் கொள்ள உதவும். குறிப்பாக வடுக்கள் இருந்த சுவடு தெரியாமல் மறையும்.

கண்நோய் கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.

கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது.

தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது. கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.

நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு.

சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.

இந்த எண்ணெய் பெண்களின் மாதாந்திர ருதுவை ஒழுங்குபடுத்தும். கர்ப்பவதிகளுக்கு கருச்சிதைவை உண்டாக்கும்.

தாம்பூலம்

[26/07 05:50] Rel MPP Sudhakar R: *அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றிலை-பாக்கு போடுவது மட்டுமே! அதிர வைக்கும் உண்மைகள்!*

பழம்தமிழர் மரபாகட்டும், இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான். முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்பிடிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா? என்பது நமக்கு தெரியாது. பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது? என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள "வாதம், பித்தம்,சிலேத்துமம்" போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது. என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும்.

இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது. சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது. வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

ஆக மொத்தம் வெற்றிலை போடுவதால் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன. அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது. தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும் சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது.
ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும்.

அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.

இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான் தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.

*வாழ்க....நம் பண்பாட்டு பெருமை*
[26/07 07:34] KKT Shobha: திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி திருவாயிலிருந்து தெறித்த தாம்பபூலத்தை தூக்க கலக்கத்தில் இருந்த மடப்பள்ளி ஊழியர் வரதன் உண்டதால் கவிமழை பொழியும் காளமேகம் ஆனார்.
[26/07 07:34] KKT Shobha: வெற்றிலை பற்றி இன்னும் சில தகவல்கள்.
காம்பையும் நுனியையும் கிள்ளி விட்டு தான் வெற்றிலையை பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் இவை இரண்டும்சீக்கிரமே அழுக தொடங்கும்.
வெற்றிலை தேவலோகத்திலிருந்து ஊர்வசியால் கொண்டு வரப்பட்டது என்று செல்லப்படுகிறது.
வெற்றிலை மென்றதும் முதலில் வரும் சாற்றை உமிழ்ந்து விட வேண்டும்.
அக்காலத்தில் அரசர்களுக்கு வெற்றிலை மடித்து தருவதற்கு என்றே தயார் நிலையில் பணியாள் இருப்பார். அடப்பக்காரன் என்று பெயர்.
[26/07 07:34] KKT Shobha: மின்வட்ட சுடராழி
வேங்கடக்கோன்
    தான் உமிழும்
பொன்வட்டில் பிடித்தவுடன்
   புகழ் பெறுவேன் ஆவேனே. .
என்று குலசேகர ஆழ்வார் கூறுகிறார்.
வெற்றிலை உண்டு துப்புவதை கலத்தில் ஏந்துவதற்கும் பணியாளர் இருந்தது தெரிகிறது.
கும்பகோணம் வெற்றிலை போலவே காசி(கங்கை கரை)வெற்றியையும் புகழ் வாய்ந்தது.