Thursday, June 18, 2015

சோரியாஸிஸ்

சோரியாசிஸ் குணமாகும் !!!!


சோரியாசிஸ் என்னும் கடுமையான தோல் வியாதி மற்றும் மஞ்சள்காமாலை நோயாளிகள் குணமாக 15 மிளகைப் பொடியாக்கி, இரண்டு தேக்கரண்டி கற்கண்டு சேர்த்து ஒன்றரை டம்ளர் தண்ணீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தவும். பத்து நாட்கள் இதே முறையில் அருந்திப் பிறகு அடுத்த ஐந்து நாட்கள் இந்தக் கலவையில் 5 பாதம் பருப்பையும் ஊறவைத்துச் சேர்த்து அரைத்து அருந்தவும். இந்த மருத்துவம் மிகவும் சக்தி வாய்ந்தது. முதல் பதினைந்து நாட்களில் ஓரளவுதான் குணமாகி இருந்தால், அடுத்து பத்துநாட்கள் இடைவெளிவிட்டு மீண்டும் 15 நாட்கள் இதே முறையில் அருந்தி வரவும். இதனால் கல்லீரல் பலம் பெறும்

சோரியாசிஸ் சில உடல் ஆரோக்கிய வழி முறைகள்:
சோரியாசிஸ் இருப்பவர்களுக்கு இது நிச்சயமாக உதவும் என்பதால் இதை பற்றிய சில உடல் ஆரோக்கிய வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.இந்த அலர்ஜியை பொறுத்தவரை மன அழுத்தம் மற்றும் உணவு ஆகியவற்றை முக்கியமாக பார்க்க வேண்டும்.இதில் எனக்கு தெரிந்த சில கருத்துகளை பற்றி பார்ப்போம்.

முதலில் நாம் என்ன செய்கின்றோமோ இல்லையோ ஒரு நாளைக்கு குறைந்தது ஆறு மணிநேரம் முதல் எட்டு மணி நேரம் வரை உறங்குவதிலேயே பாதி ஆரோக்கியம் நமக்கு கிடைத்து விடும்.அடுத்ததாக காலையில் எழுந்தவுடன் அரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.ஆனால் நாம் யாரும் அதிகமாக தண்ணீர் குடித்து நம்முடைய வயிற்றை சுத்தமா வைத்து கொள்வதில்லை.நாம் எப்படி வகை வகையாக சாப்பிட்டு விட்டு அடுத்த முறை சாப்பிடுவதற்கு தட்டினை கழுவிகின்றோமோ அது போலவே தான் நம்முடைய வயிறும்.முதல் நாள் நாம் சாப்பிட்ட உணவுடன் கலந்தே அடுத்த நாளைக்கான உணவு ஜீரணிக்க படுகின்றது.காலையில் நமக்கு தண்ணீர் தாகம் இருக்காது.முதன் முதலாக குடிக்கும் போது ஒரு மாதிரி இருக்கும்.ஆனால் போக போக சரி ஆகிவிடும். தண்ணீர் குடிக்க பழகி கொண்டால் அதன் பின்னர் உங்களுக்கே சில உடல் ஆரோக்கிய மாற்றம் தெரிய வரும்.

அடுத்ததாக யோகா.சில அறிவாளிகள் யோகாவையும் உடற்பயிற்சியையும் சேர்ந்து செய்வர்.யோகா என்பது உடற் சக்தியை சேர்ப்பது.உடற் பயிற்சி என்பது சேர்த்து வைத்ததை வீணாக்குவது.இந்த இரண்டும் சேர்ந்து செய்தால் பளு தாங்காமல் ஸ்ப்ரிங் அறுந்த கதை தான்.அதனால் இதில் எதாவது ஒன்றை மட்டுமே செய்ய வேண்டும்.

காலையில் யோகா செய்தவுடன் மூலிகை சாறு குடிக்க பழக வேண்டும்.கத்தாழை (சதை பகுதியை மட்டும் எடுத்து கொள்ளலாம்.தோலில் மட்டுமே கசப்பு தன்மை இருக்கும்),வேப்பங் கொழுந்து(சிறிது சேர்த்தல் போதும்),துளசி (சற்று அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும் ஏன் என்றால் வேப்பிலை கசப்பு தன்மையை குறைக்க உதவும்.அதை விட பல மருத்துவ குணங்களை கொண்டதும் கூட ),அருகம் புல்.(நம்முடைய உடம்பை ரத்தத்தை சுத்தமாக வைத்து கொள்ளும்).

அடுத்தாக யோகா செய்ய வேண்டிய நேரங்கள் என்று பார்த்தால் காலை சூரிய வெளிச்சம் நம் மீது பட தொடங்கி அது நமக்கு சுடுவதாக உணரும் வரை(அதற்காக சூரிய வெளிச்சம் எனக்கு சுடவில்லை என்று நண்பகல் வரை உட்கார்ந்து இருக்க கூடாது).மாலையில் அது போலவே சூரியன் சூடு குறைந்த பின் மாலை வெயில் முதல் மறையும் வரை இருக்கும் நேரத்தினை எடுத்து கொள்ளலாம்.சோரியாசிஸ் உள்ளவர்கள் சுடும் சூரிய வெளிச்சத்தை தவிர்ப்பது நல்லது.காலை மாலை வெயில் வெயிலில் நன்றாக செல்லலாம்.முடிந்த வரை தவிர்த்தால் சோரியாசிஸ் கூடுவதை தவிர்க்கலாம்

சோரியாசிஸ் - குணமாக ஒரு விடிவு காலம் :
முன்குறிப்பு :

சோரியாசிஸ் உள்ளவர்கள் உங்கள் வீட்டில் பெட்டி பெட்டியாக அடிக்கி வைத்து இருக்கும் மருந்துகளை முதலில் குப்பையில் போட்டு விட்டு வந்து இந்த மருந்தினை உபயோகிக்க வாருங்கள்.இந்த மருந்தினை பற்றி என்னுடைய முதல் பதிவில் இதுதான் மருந்து என்று கூறி இருக்கலாம்.ஆனால் அப்படி நான் கூறபோய் இதை பார்த்து நீங்கள் இது ஒரு விளம்பர தளம் என்று நினைத்து விட கூடாது அல்லவா!.அதனால் தான் சில அடிப்படை கருத்துகளை கூறிவிட்டு கூறலாம் என்று இருந்தேன்.இப்போது என்னை நம்பி பதிவிற்கு வந்து கேட்பதால் சொல்கிறேன்.இதை நீங்களே தயாரித்து கொள்ளலாம்.

சோரியாசிஸ் குணமாக:

சோரியாசிஸ் குணமாக சித்தாவிலும் ஹோமியோபதியிலும்(உட்பிரிவு மலர் மருந்து)மருந்து உண்டு.சித்தவில் பார்த்தால் அது உடல் சம்பந்தபட்டது.ஆனால் ஹோமியோபதியை எடுத்து கொண்டால் அது மன சம்பந்தபட்டது.அதனால் நாம் உடலுக்கு மருந்து கொடுக்கும் சித்தா எடுத்து கொள்வோம்.ஏன் என்றால் ஹோமியோபதியில் அந்த நோய்க்கு சம்பந்தபட்டவர் நேரில் வரவேண்டி வரும்.அதையும் மீறி நான் அதை பற்றிய பதிவாக இட்டால் அதனை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாது.சரி இனி சோரியாசிஸ் குணப்படுத்துவதற்கான மருந்து என்னவென்றால் "வெட்பாலை" -(Holarrhena Antidysenterica).இதனை வட்டார மொழிகளில் 'வெம்பாலை' என்று கூறுவர்.இந்த மருந்தினை பற்றி கூறும் முன் சில விசயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.நான் இந்த மருந்தினை தைரியமாக பரிந்துரைப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

என்னடைய தோழி ஒருத்திக்கு சோரியாசிஸ் வந்து அவளுக்கு தலையில் இருந்து ஆரம்பித்து தற்போது நான் யூகித்தபடி அவளுக்கு இடுப்பு வரை வந்து இருக்க வேண்டும்.ஆனால் அவளை
ஒரு இரண்டு மாதங்கள் கடந்து அவளை பார்த்தேன்.எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.ஏன் என்றால் அவளுக்கு சோரியாசிஸ் முற்றிலுமாக மறைந்து போய் தழும்பு கூட தெரியவில்லை.அவள் இந்த மருந்தை பற்றி கூறினாள்.அடுத்ததாக என்னுடைய சித்தா மருத்துவ நண்பர் நான் இந்த மருந்தை பற்றி அவரிடம் கூறிய போது அவருடைய மருந்துகளில் வெட்பாலையின் இலைகளை கொண்டு தான் மருந்து தயாரித்து வந்து கொண்டு இருக்கின்றார் என்பதை தெரிந்து கொண்டேன்.அவர் இந்த வெட்பாலை உட்பொருளாக கொண்டு சோரியாசிஸ்சிற்காக மருந்து தயாரித்து இதுவரை அவர்களிடம் சென்றவர்கள் மீண்டும் சோரியாசிஸ் வந்ததாக யாரும் இல்லை என்பதை கூறினார்.சரி இனி இந்த வெட்பாலையை எப்படி பயன்படுத்தவது என்பதை பற்றி பார்க்கலாம்.

வெட்பாலை -(Holarrhena Antidysenterica):

முதலில் தூய்மையான தேங்காய் எண்ணெய்யில் வெட்பாலையின் கொழுந்து ( நுனி பகுதி ) அதை ஒடித்து பார்த்தால் அதில் பால் வடியும்.அந்த பாலினை சேகரித்து தேங்காய் எண்ணையில் கலந்து வெயிலில் வைக்க வேண்டும்.இதில் கால் லிட்டர் தேங்காய் எண்ணெயில் இரண்டு ஸ்பூன் வெட்பாலையின் பாலை கலக்க வேண்டும்.அது சிறிது நேரம் கழித்து கத்திரிகாய் நிறத்தில்(purple color)அந்த எண்ணெய் மாறும் வரை வைக்க வேண்டும்.அப்படி நிறம் மாறாமல் இருந்தால் இன்னும் சிறிது நேரம் அதை வைத்து இருக்க வேண்டும்.கண்டிப்பாக மாறி விடும்.இதனை நன்றாக உடம்பில் பூசி செதில்களில் நனையும்படி தேய்த்து கொள்ளவும்.தினமும் இதனை தேய்த்து வந்தாலே போதுமானது.

எப்போதும் இந்த எண்ணெய் உங்கள் உடம்பில் சிறுது அளவு இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.தலைக்கும் இந்த எண்ணெய் தேய்த்து சீகக்காய் தேய்த்து குளித்து விட்டு மீண்டும் இதே எண்ணெய் தேய்த்து கொள்ள வேண்டும்.இது பொதுவாக சித்தா மூலிகை தோட்டத்தில் கிடைக்கும்.அப்படி கிடைக்காவிட்டால் எதாவது ஒரு சித்த மருத்துவரிடம் கேட்டால் அவர் கூறிவிடுவார்.மதுரையில் நான் இருப்பாதால் இங்கு வெட்பாலை செடி கிடைக்கும் இடம் தெரியும்.மதுரையில் இருந்து மேலூர் செல்லும் வழியில் உள்ள யானைமலையின் உச்சியில் இந்த செடி அடர்ந்து கிடக்கும்.அது போக இதே எண்ணையை எந்த ஒரு வெட்டு காயமோ அல்லது தோல் சம்பந்தபட்ட அனைத்திற்கும் இதே எண்ணையை உபயோகபடுத்தலாம்.

அடுத்ததாக உணவு முறை :
உணவு முறையை பொறுத்த வரை நீங்கள் கிழே உள்ளதை மட்டும் மனதில் வைத்து கொள்ளுங்கள்.இதனை மட்டும் தவிர்த்தல் போதும்.

*பால்
*மது
*செயற்கை நிறம் ஊட்டுபவை மற்றும் ப்ரிசெர்வேடிவ்கள்
*காளான் (இது பூஞ்சான் வகைகளை சேர்ந்தது.சோரியாசிஸ் அல்லாதவர்களும் இதனை உட்கொள்ள கூடாது என்பதே உண்மை.).
*உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படும் உணவு வகைகள்.

இதனை மட்டும் கடை பிடித்தால் போதுமானது.காளான் எதற்காக சேர்க்க கூடாது என்றால் அதில் விஷ காளான்கள் இருக்கும்.சுத்தமான காளான்களை சாப்பிடுவதில் தவறு இல்லை.இதை எப்படி கண்டு பிடிப்பது என்றால் சுடுநீரில் காளான்களை போட்டு அதில் ஒரு வெள்ளி காசினை போட்டால் அது நிறம் மாற கூடாது.அப்படி இல்லாமல் மாறினால் அது விஷ காளான்கள்.சோரியாசிஸ் உள்ளவர்கள் சுத்தமான காளான்களாக இருந்தாலும் சேர்க்க கூடாது.உங்கள் சந்தேகங்களை மறுமொழியில் கேட்கலாம்.

சோரியாஸிஸ் எளிய மருத்துவம் !!!

கார்போக அரிசி-50கிராம்
வெள்ளை மிளகு-10கிராம்
பரங்கி பட்டை சூரணம்-25கிராம்
வேப்பில்லை பொடி-50கிராம்
அனைத்தையும் பொடியாக்கி ஒன்றாக சேர்த்து காலை இரவு சிறிது(கேப்சூல்)அளவு சாப்பிடவும்.

தனியாக திரிபலா சூரணம் சாப்பாட்டிர்க்கு முன் தேனில் கலந்து சாப்பிடவும்.

அகத்தி மருத்துவம்!!!

சோரியாஸிஸ் குணமாக: !!!

சோரியாஸிஸ் எனப்படும் ஒரு வகை தோல் நோய் ரத்தம், எலும்பு போன்றவற்றின் சீர்கேடால் நமது சருமத்தைப் பாதிக்கும். இதற்கு இன்றைய நவீன மருத்துவம்கூட முறையான மருந்துகள் இன்றி தவித்து வருகிறது. ஆனால் சித்தர்கள் அருளிய சித்த மருத்துவத்தில் ஏராளமான மருந்துகள் இந் நோயை முற்றிலும் குணப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் அகத்தி "சோரியாஸிஸ்' எனப்படும் தோல் நோய்க்கு மிகச் சிறந்த பலன் தருவதை என் அனுபவத்தில் கண்டி ருக்கிறேன்.

அகத்திக்கீரை, தேங்காய் பத்தை வகைக்கு 100 கிராம்; சீரகம், கஸ்தூரிமஞ்சள் வகைக்கு 100 கிராம் இவற்றை நீர் சேர்த்து விழுதாய், அதாவது துவையல்போல் அரைத்து, பாதிக்கப்பட்ட பகுதி முழுவதும் தேய்த்துக் குளித்துவர, தோல் நோய்கள் அனைத்தும் விலகும். "சோரியாஸிஸ்' எனப்படும் தோல் நோய்க்கு முறையாக உள்மருந்து எடுத்துக் கொண்டு, இதனை வெளிப்பூச்சாய் பயன் படுத்தி வர, நோயிலிருந்து விரைவில் மீண்டு விடலாம்

Wednesday, June 17, 2015

வெங்காயம் வெங்காயத்தாள்

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடுஎன்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம்,

வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.

யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.

செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர, பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.

சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.

புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.

நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.

வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்

++++++++++++++++++++++++++++++++
வெங்காயத்தின் 50 மருத்துவக் குணங்கள்!

வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்து விடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,

குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக் நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.

35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.+++++++++++(((((

வெங்காயம் - பாதம் வைத்தியம்...!
Raw ONION on bottom of the feet to take away illness.
நறுக்கிய வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்து உடல் சோர்வு 
போக்கலாம்...
வெங்காயம் நச்சுக்களை உறிஞ்சும் தன்மை உடையது.
இங்கிலாந்தில் பிளேக் நோய் வந்த போது, காற்றில் இருக்கும் 
நச்சுக்களை எடுக்கவும்...அந்த நோயிலிருந்து விடுபடவும் 
வெங்காயத்தை அதிகம் உபயோகின்தனர்.
NEVER SAVE AN ONION. 
It will absorb all the toxins in the air of your 
refrigerator. 
வெங்காயத்தை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து 
உபயோகிக்கதிர்கள். அதில் உள்ள அனைத்து நட்சுக்களையும் 
வெங்காயம் உறிஞ்சிக்கொள்ளும். மேலும் அதனை நீங்கள் 
உட்கொண்டால் நச்சுக்களை உண்பதற்கு 
சமம்.
நறுக்கிய வெங்காயத்தை நீங்கள் படுக்கும் படுக்கையை சுற்றிலும் 
வைத்துக்கொண்டால் இரவு உறக்கம் மற்றும் சுவாசிக்கும் காற்று 
சுத்தமானதாக இருக்கும். உடல் நலம் இல்லாதவர்கள் விரைவில் 
குணமடைவார்கள்.
வெங்காயம் மற்றும் வெள்ளைபூண்டு ஒரு சிறந்த நுண்ணுயிர் 
கொல்லியாகவும், பாக்டீரியா எதிர்ப்பாகவும் செயல்படுகிறது.
நறுக்கிய வெங்காயத்தை உங்கள் பாதத்தின் அடியில் மற்றும் 
நடுவினில் வைத்து படுத்து தூங்கும்போது அதன் செயல் நேரடியாக 
நமது உடம்பில் வினை புரியும். உங்கள் இரத்தத்தை நன்கு சுத்தம் 
செய்யும் மற்றும் உங்கள் வயற்றில் இருக்கும் நட்சுக்களையும் 
உறிஞ்சிவிடும்.(வெள்ளைபூண்டயும் இது போல் உபயோகிக்கலாம்).
வெங்காயப் பூவின் மருத்துவ குணங்கள்..!
சுவைக்காக மட்டுமின்றி வெங்காயம் வியக்கத்தக்க மருத்துவ 
ரீதியாகவும் பயன்படுகிறது. நன்கு வளர்ந்த வெங்காயம் 
சமையலில் எவ்வாறு உதவுகிறதோ அதேபோல வெங்காயச் 
செடியில் உள்ள பூக்களும் மனிதர்களின் நோய் போக்கும் மருத்துவ
 குணம் கொண்டவையாகும்.
வெங்காயத்தையும், வெங்காயப்பூவையும் சேர்த்து அரைத்து ஒரு 
அவுன்ஸ் சாறு எடுத்து இரவில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் 
பருகிவர காசநோய் குணமடையும்.
வெங்காயப்பூக்களையும் வெங்காயத்தையும், பொடியாக நறுக்கி 
தயிரில் ஊறப்போட்டு சாப்பிட மூலம் தொடர்புடைய எரிச்சல்,
 குத்தல் குணமடையும்.
கண்நோயால் பாதிக்கப்பட்டு பார்வை மங்கலாக இருப்பவர்கள் 
வெங்காயப்பூவைக் கசக்கி சாறு பிழிந்து எடுத்து இரண்டு சொட்டு 
சாறு காலை, மாலை கண்களில் விட்டு வர மூன்று நாட்களில் 
கண்பார்வை தெளிவடையும்.
பல்வலியால் அவதிப்படுபவர்கள் சம அளவு வெங்காயம் மற்றும் 
வெங்காயப்பூ எடுத்து அரைத்து சாறு பிழிந்து தினமும் 
வாய்கொப்பளித்து வர பல் மற்றும் ஈறு தொடர்புடைய நோய்கள் 
குணமடையும்.
ஒரு கைப்பிடியளவு வெங்காயப்பூ எடுத்து பொடிப்பொடியாக 
நறுக்கி ஒரு சட்டியில் போட்டு அதில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு 
அடுப்பில் வைத்து சூடேற்றவும். வெங்காயப்பூ நன்றாக 
வெந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிறிதளவு உப்பு சேர்த்து 
உட்கொள்ள வயிற்று வலி உடன் நிற்கும்.
வெங்காயம் சேர்த்து சமைக்கும் உணவுகளில் வெங்காயத்திற்கு
 பதிலாக வெங்காயப்பூவையும், வெங்காயத்தாளையும் சிறியதாய்
 நறுக்கிப் போட்டு சேர்க்கலாம். இது பசியை தூண்டும். குடலில் 
உள்ள தேவையற்ற வாயுவை அகற்றும். வெங்காயப் பூவினை 
ஏதாவது ஒரு வகையில் பக்குவம் செய்து சாப்பிட கீழ் வாதம் 
குணமடையும்

---------------------------------------------------------